"பாஜக மூத்த தலைவர் அத்வானியின், லஞ்ச, ஊழலுக்கெதிரான நாடு தழுவிய ஜன சேத்னா யாத்திரையின் இறுதி நிகழ்ச்சியில் அதிமுக கலந்து கொள்ளும்" என அதிமுக பொது செயலாளரும், தமிழக முதல்வருமான ஜெயலலிதா அறிவித்துள்ளார்.
தொலைபேசியில் அத்வானியுடன் உரையாடியபோது, இன்று டெல்லி ராம் லீலா மைதானத்தில் நடக்கும் இறுதி நிகழ்ச்சியில் ஜெயலலிதா பங்கேற்க வேண்டுமென அத்வானி விரும்பியதாகவும், தவிர்க்க முடியாத காரணங்களால் தன்னால் டெல்லி வர முடியவில்லை என்றும், அதிமுக சார்பாக, பாராளுமன்ற அதிமுக தலைவர் தம்பிதுரை கலந்து கொள்வார் என அத்வானியிடன் கூறியதாக அதிமுகவின் செய்தி குறிப்பில் கூறப்பட்டுள்ளது.
மேலும், மதுரை அருகே, அத்வானியின் யாத்திரையின் ஊர்வல பாதையில் வைக்கப்பட்டிருந்த குண்டுவெடிப்பு சதியை முறியடித்ததற்காக அத்வானி, தனக்கு நன்றி தெரிவித்தார் என்றும் ஜெயலலிதா தெரிவித்தார். அத்வானியும், ஜெயலலிதாவும் கூட்டணியில் இருந்தாலும், இல்லாவிட்டாலும் பரஸ்பரம் நட்பு பாராட்டி வருபவர்கள் என்பது குறிபிடத்தக்கது.
No comments:
Post a Comment