Latest News

மின்சார மீன்கள்


நாம் பார்க்க இருப்பது மிக உயர்ந்த மின் ஆற்றலை தன்னகத்தே கொண்டு விளங்கும் எலக்டிரிக் ஈல் (Electric Eel) என்று அழைக்கப்பபடும் மின்சார மீனைப் பற்றியதாகும்.
தென் அமெரிக்காவின் அமேசான் ஆறுகளின் கிளை நதிகளில் வாழக்கூடிய இந்த வியப்பளிக்கும் மீன், தன் எதிரியின் உடலில் பட்ட மாத்திரத்தில் உயிரிழக்கச் செய்யும் அபரிதமான மின் ஆற்றலின் உற்பத்திக் கேந்திரமாக விளங்கிவருகின்றது.

நம் நாட்டிலே மின் கம்பங்கள் மற்றும் தொழிற்சாலைகள் போன்றவற்றின் மின் சாதனங்களின் அருகில், அபாயம் 440V  மின்சாரம் என்று எழுதப்பட்டு மண்டை ஓட்டிற்கு கீழே இரண்டு  எலம்புகளினால் பெருக்கல் குறி அமைப்பில் வரையப்பட்டு எச்சரிக்கை விடப்பட்டிருப்பதைக் கண்டிருப்போம். 440V மின்சாரம் என்பதே மனிதார்களைப் பொருத்த வரை அபாயம் என்ற நிலை இருக்கும் போது 650V மின்சாரம் எந்த அளவிற்கு அபாயகரமானது என்பதைச் சொல்லித் தெரிய வேண்டியதில்லை.

எலக்டிரிக் ஈல் தன் உடலில் கொண்டிருக்கும் மின் அழுத்தம் 650V மின்சாரமாகும். இத்தகைய அபரிதமான மின் ஆற்றல்தான், இவை இறைவன் புறத்திலிருந்து அடையப் பெற்ற விதிவிலக்கான அம்சமாகும். இன்னும் சில வகை மீன்களுக்கும் சிறிய அளவிலும் குறிப்பிடக் தக்க அளவிலும் மின் ஆற்றல் இருப்பினும் இந்த எலக்டிரிக் ஈல் அவை அனைத்தையும் காட்டிலும் மிக அதிக அளவிற்கு மின் ஆற்றல் பெற்று விளங்குகிறது.
அமேசான் ஆற்றின் கிளை நதியாகிய ஒரினோகோ ஆறுதான் எலக்டிரிக் ஈல் மீனுடைய பிறப்பிடமாகும். 2.75 மீட்டர் நீளமும், சுமார் 22 கிலோ எடையுடன் கூடிய இந்த மீன் உருவ அமைப்பில் பாம்பின் அமைப்பில் காணப்படுகின்றது. சாம்பல் நிறத்துடனும் மிகக் குறைந்த அளவிளான செதில் அமைப்புடனும் உருளையான வடிவத்திலும் அமைந்துள்ளது. உள் உறுப்பு அனைத்தும் இவற்றின் உடலின் நீளத்தில் ஐந்தில் ஒரு பகுதியில் அமைந்துள்ளன.

இவற்றிற்கு சிறிய அளவிலே செவுள் அமையப் பெற்றிருப்பினும் கூட இவை சுவாசித்ததன் பின்னர் வெளியிடும் கார்பன் டை ஆக்ஸைடை வெளியேற்றவே இதைப் பயன்படுத்துகின்றன. இவை வாழக்கூடிய ஆறுகளின் தண்ணீரில் ஆக்சிஜன் அளவு குறைவாக இருப்பதனால் இவை அடிக்கடி தண்ணீரின் மேற்பரப்பிற்கு வந்து வாயின் மூலம் சுவாசித்துச் செல்கின்றன. மேலும் இவற்றின் வாயின் உட்புறத்தில் அதிக அளவிற்கு இரத்த நாளங்கள் அமையப் பெற்று இருப்பதனால் அதிகமான ஆக்சிஜனை கிரகித்துக் கொள்ள ஏதுவாயிருக்கின்றது. இவை அதிகமான நேரங்கள் அசைவின்றி மிகவும் சோம்பல் வாய்ந்த நிலையிலேயே கழிக்கின்றன.


இவற்றின் திறனைப் பற்றி பண்டைய கால மக்களும் அறிந்து வைத்திருந்தனர் என்பதனை வறலாறுகளில் அறிய முடிகின்றது. பண்டைய ரோமானியப் பேரரசர்கள் எலக்டிரிக் ஈலைக் கொண்டு தங்கள் எதிரியை கொன்று அழித்தனர். இவை உயிரைப் போக்கி விடக்கூடிய ஏதோ ஒரு ஆற்றல் பெற்று விளங்குவதை அறிந்து வைத்திருந்தனரே தவிர இவற்றின் அபரிதமான மின் ஆற்றலைப் பற்றிய அறிவு அவர்களுக்கு இருக்கவில்லை. பண்டைய ரோமானிய மன்னர்கள் இவற்றை நன்கு அலங்கரித்து குளங்களில் வளர்த்து தங்களின் அரசியல் எதிரிகள் மற்றும் தங்களுக்கு அடிபணியாத அடிமைகளை குளத்தில் தள்ளி இவற்றின் மூலம் சாகடித்துள்ளதை வறலாறுகளில் காண முடிகின்றது.


இவற்றின் மின் அதிர்வு பெரிய குதிரையையே 6 மீட்டர் தொலைவிற்குத் தூக்கியெறியும் ஆற்றல் உள்ளதாகும். இந்த மீனைப் பொருத்தவரை தனது உணவிற்காக இவைகள் தனது எதிரியின் மீது மோதினாலே போதுமானதாகும். அல்லது குறிப்பிட்ட தூரத்திற்கு மின்சாரத்தைப் பாய்ச்சியும் தன் இரையைக் கொல்லும் ஆற்றலைப் பெற்று விளங்குகின்றது. எலக்ட்ரிக் ஈல் அவற்றின் மீது பட்ட உடன் மின் தாக்குதலால் உடனே செயலிழந்து விடுகின்றன அல்லது பொதுவாக இறந்துவிடுகின்றன. பட்ட மாத்திரத்தில் மனிதர்களின் உயிரைக் குடிக்கும் ஆற்றல் இந்த உயிரினத்திற்கு மாத்திரம்தான் இருக்கின்றது என்று சொன்னால் மிகையாகாது.

இவற்றின் உணவு பெரும்பாலும் இதரவகை மீன்கள் மற்றும் தவளைகளாகும். இருப்பினும் கூட இவை காடுகளின் பழங்கள் மற்றும் விதைகள் மற்றும் கொட்டைகள் ஆகியவற்றை நன்றாக உண்ணக் கூடியவை. பருவகாலத்தில் பெய்யும் மழையினால் அமேசான் ஆற்றில் ஏற்படும் அதிகப்படியான வெள்ளப் பெருக்கினால் ஆற்று நீர்மட்டம் உயர்ந்து அடர்ந்த வனப்பகுதியில் வெள்ளப் பெருக்கு ஏற்படுவதனால் இவை காடுகளினுள் பயணித்து பழங்கள் மற்றும் விதைகளை நன்கு உண்ணுகின்றன. இந்த பருவத்தில்தான் மரங்களிலிருந்து அதிகப் படியாக பழங்கள் விழுகின்றன.

எலக்டிரிக் ஈலின் உடல் அமைப்பும் அதன் மின் உறுப்புகளைப் பற்றிய ஓர் விளக்கப் படம்.

எலக்டிரிக் ஈலின் உடல் உள் உறுப்புக்கள் அனைத்தும் அவற்றின் உடல் நீளத்தில் ஐந்தில் ஒரு பகுதியிலேயே அமைந்துள்ளன. மிஞ்சிய பகுதியில் மின்சாரத்தை உற்பத்தி செய்யும் உறுப்புகள் அமைந்துள்ளன. இவற்றின் மின்சார அமைப்பு ஒரு பேட்டரியின் அமைப்பை முழுதும் ஒத்திருக்கின்றன. பேட்டரியின் நேர் எதிர் துருவங்களைப் போன்றே இவற்றிற்கும் இருதுருவங்கள் அமையப் பெற்றுள்ளன. மின்சாரம் பாய்ந்து செல்ல இருதுருவங்கள் இல்லையெனில் மின் சுற்று நிறைவு பெறாத நிலையில் மின்ணோட்டம் முழுமைப் பெறுவதில்லை. இவற்றின் தலைப்பகுதி நேர் துருவம்(பாஸிடிவாகவும்) அதன் வால் பகுதி எதிர் துருவம்(நெகடிவாகவும்) அமைந்து மின்சாரம் பாய்ந்து செல்ல வகைச் செய்கின்றன. இவை இரண்டு வித்தியாசமான வெவ்வேறான மின்சார உற்பத்தி உறுப்புகளைப் பெற்றுள்ளன. ஒன்று சாக்ஸ் (Sacks) என்றழைக்கப்படும் உறுப்பு. சாக்ஸ் என்றழைக்கப்படும் உறுப்பின் மூலம் மிகக் குறைந்த அளவாக 5 முதல் 10 வோல்ட் வரை மின்சாரம் உற்பத்தி செய்யப் படுகின்றது. இந்த குறைந்த மின் அழுத்தம் கொண்ட மின்சாரம் அவற்றின் சுற்றுப் புறங்களுக்கு அனுப்பி மற்ற ஈல்களுடன் தொடர்பு கொள்ளவும், அவை இடம் பெயர்ந்து செல்லவும் பயன்படுத்துகின்றன. மேலும் இதனைக்கொண்டு இரையின் இருப்பிடத்தைப்பற்றிய துப்பு அறியவும் இவைகளினால் பயன்படுத்தப்படுகின்றது.

அடுத்த உறுப்பு இரண்டு பிரிவுகளாகப் பிரிக்கலாம். ஒன்று முக்கிய சேமிப்பு மின்கலம் (main batary) ஆகும். அடுத்து வேட்டை உறுப்பு (hunter organ) ஆகும். இரண்டும் மின்சாரத்தைச் சேமித்து வைக்கவும் அதை தேவையின் போது வெளிப்படுத்தவும் உதவுகின்றன. 1938ம் ஆண்டு நியூயார்க் உயிரியல் பூங்காவின் பொருப்பாளர் டபிள்யூ. கோட் (W.Coate) அவர்களினாலும் நியூயார்க் பல்கலைக்கழகத்தின் இயற்பியலார் ஆர்.டி.காக்ஸ் (R.T.Cox) இருவரினாலும் இணைந்து செய்யப்பட்ட ஒரு சுவாரசிய ஆராய்சியில் வித்தியாசமான சில அம்சங்களைக் கண்டறிந்தனர். இயற்கையில் எலக்டிரிகல் ஈல் வாழக்கூடிய சூழ்நிலையிலேயே ஒரு நெகடிவ் மின் கம்பியுடன் இணைந்த 2 வோல்ட் நியான் பல்புடன் இணைத்தபோது அந்த பல்பு எரியத்துவங்கியது. மேலும் வெளிப்புறத்திலிருந்து மின்சாரத்தை அதில் இணைத்தபோது அவை சீண்டப்பட்டு தனது மின்சாரத்தை மின் ஆற்றல் ஒலி ஆற்றலாக மாற்றப்படும் அமைப்பிலே ஒரு ஸ்பீக்கரைப் போன்று சத்தத்துடன் வெளிப்படலாயிற்று. அந்த சத்தம் நன்கு கேட்டக் கூடிய வகையிலே அமைந்திருந்ததைக் கண்டார்கள். அப்போது அதனுடன் இணைக்கப்பட்ட வோல்ட் மீட்டர் 500 வோல்ட் மின்சாரத்தை வெளியிட்டதை அறிந்தார்கள். 

இறந்த 9 மணி நேரத்திற்குப் பிறகும் மின் அதிர்வைத் தரும் பயங்கரம்.
இவற்றின் மின் திறன் இவற்றின் வயது மற்றும் இவற்றின் அளவிற்கு ஏற்றார்போல் அளவில் வேறுபடுகின்றன. இவற்றின் வயது ஏற ஏற இவற்றின் மின் ஆற்றல் திறனும் அதிகறித்துச் செல்லுகின்றது. இவற்றின் உடலில் மின்சார உற்பத்தியின் திசுக்கள் வித்தியாசமான அமைப்பில் அமைக்கப்பட்டுள்ளது. இவை எலக்டிரோசைட் (electro cytes) என்று அழைக்கப்படுகின்றன. இவை ஒன்றன் மேல் ஒன்றாக அடுக்கப்பட்ட நிலையில் வட்ட வடிவில் அமைந்துள்ளன. ஏறக்குறைய இவற்றின் எண்ணிக்கை இரண்டு லட்சம் வரை அமையப் பெற்றுள்ளன. இவற்றின் ஒரு எலக்டிரோசைட் 0.15 வோல்ட் மின்சாரத்தை உற்பத்தி செய்யும் ஆற்றல் பெற்று விளங்குகின்றன. இவைகளின் ஒருங்கிணைந்த முழுத் தொகுப்பே 650 வோல்ட் மின்சாரமாகும். இவை மீனின் அளவிற்கு ஏற்றார்போல் வித்தியாசப்படுகின்றன.

ஏலக்டிரிக் ஈல்கள் எல்லா நேரத்திலும் முழு மின் ஆற்றலையும் பிரயோகம் செய்வதில்லை. இவை தன் ஆற்றலைப் பயன்படுத்தாத சமயங்களில் ஒன்வொன்றின் மின்திறனும் 0.8 வோல்டான நிலையில் சம நிலையாயிருக்கும். இந்த எலக்ட்ரோசைடின் வெளிப்புறம் (+) நேர்த் துருவமாகவும் அதன் உட்புறம்  (-) எதிர் துருவமாகவும் அமையப் பெற்று உபயோகத்தின் போது இவ்விரு துருவங்களும் ஒன்றுடன் ஒன்று இணைந்து உயர் மின் அழுத்தம் செலுத்தக் கூடிய முறையிலே அமையப் பெற்றுள்ளன. இவை உயிருடன் இருக்கும் போது மட்டுமல்லாது இறந்த 9 மணி நேரத்திற்கு பிறகும் உடலில் சேமித்து வைக்கப்பட்டிருந்த மின்சாரத்தினால் மின் அதிர்வை ஏற்படுத்தி ஆபத்தை விளைவிக்கக் கூடியதாகும்.



எலக்டிரோசைட் ஒன்றுடன் ஒன்று இணைந்து மின்தொகுப்பை ஏற்படுத்தக் கூடிய விளக்கப் படம்.

எலக்டிரோசைட் உபயோகம் இல்லாத சமயங்களில் அவற்றின் அமைப்பு கீழ் கண்ட நிலையில் அமையப் பெற்றிருக்கும்.
 
மின்சாரத்தை பிரயோகம் செய்யும் போது ஒன்றுடன் ஒன்று இணைந்து மின்சாரத் தொகுப்பை ஏற்படுத்தி உயர்ந்த மின் அழுத்தத்தை ஏற்படுத்தும் போது அவற்றின் நிலை.

மிக அதிசய பயணம்
எலக்டிரிக் ஈல் ஆற்று நன்னீரில் வாழக்கூடியதாக இருப்பினும் கூட இவைகள் குஞ்சு பொறிக்க கடலின் உப்பு நீரை நோக்கிச் செல்லுகின்றன. இவை ஏன் தங்கள் வாழும் இடத்தை விடுத்து கடலின் உப்பு நீரை நோக்கிச் செல்லுகின்றன என்பதற்கு இதுவரை சரியான காரணம் அறிவியல் அறிஞர்களினால் கண்டுபிடிக்க முடியவில்லை. இவை சரகாஸ்ஸோ(saragasso) கடலிற்கு பயணித்து கடலின் மிக ஆழத்தில் முட்டையிட்டு தங்கள் வாழுமிடத்திற்கு திரும்பி வந்து வாழ்க்கையைத் தொடருகின்றன. அதன் பிறகு முட்டையிலிருந்து வெளிவரும் லார்வாக்கள் வளைகுடா நீரோட்டத்தினோடு (gulf stream) தங்கள் பயணத்தை தொடருகின்றன. இந்த சிறிய லார்வாக்கள் ஒரு வருடக் காலத்தில் பயணித்து அல்லது நீரோட்டத்தினால் அடித்துச் செல்லப்பட்டு வட அமெரிக்காவின் கடற்கரையையும், முன்று ஆண்டுகளில் ஐரோப்பாவையும் அடைகின்றன. பின்னர் இவை வளைகுடா நீரோட்டத்தினால் திரும்பி தங்கள் பெற்றோர் வாழும் தென் அமெரிக்காவின் ஆற்று முகத்துவாரங்களை அடையும் போது இவை உருவத்தில் எலக்டிரிக் ஈலின் உருவத்தை அடைகின்றன. பின்னர் இவை ஆறுகளுக்குத் திரும்பி தங்கள் வாழ்க்கையைத் தொடங்குகின்றன. மீண்டும் அவை பருவத்தை அடைந்து முட்டையிடும் காலம் வரை அங்கே கழித்துவிட்டு முட்டையிட கடலின் உப்பு நீரை நோக்கி தங்கள் பயணத்தைத் தொடர்கின்றன. இதுவே இவற்றின் வாழ்க்கைச் சுழற்சியாகும்.



No comments:

Post a Comment

TIYA

WEBSITE DESIGNED BY: NOORUL IBN JAHABER ALI WEBSITE CONTROLLED BY: DOT COLORS
sourceNOORUL IBN JAHABER ALI Copyright © 2015

Theme images by Bim. Powered by Blogger.