"2002 ஆம் ஆண்டு குஜராத்தில் நடைபெற்ற கலவரங்களிலும் முன்னாள் பாராளுமன்ற உறுப்பினர் இஹ்ஸான் ஜாப்ரியைக் கொலை செய்யப்பட்டதிலும் குஜராத் முதல்வர் நரேந்திர மோடிக்குப் பங்குண்டு" என உச்சநீதிமன்றம் நியமனம் செய்த அமிகஸ்கோரி ராஜூ ராமச்சந்திரன் அறிக்கை தெரிவித்துள்ளது.
2002 ஆம் ஆண்டு குஜராத்தில் நடைபெற்ற கலவரங்களில் முன்னாள் நாடாளுமன்ற உறுப்பினர் இஹ்ஸான் ஜாப்ரி கலவரக்காரர்களால் தீ வைத்து கொலை செய்யப்பட்டார். இந்தக் கொலைக்கும் மோடிக்கும் சம்பந்தமில்லை என ராகவன் தலைமையிலான சிறப்பு புலனாய்க்குழு முன்னதாக தெரிவித்திருந்தது. இதனை ராமச்சந்திரன் அறிக்கை மறுத்துள்ளது. விசாரணை நீதிமன்றம் இந்த அறிக்கையினை ஏற்றுக் கொண்டால் மோடி மீது இந்தியக்குற்றவியல் சட்டம் 153 A, 153 B, 505 மற்றும் 166 கீழ் குற்றச்சாட்டு பதிவு செய்ய முடியும்.
முன்னர், மோடி மீதான வழக்கைத் தள்ளுபடி செய்து விடலாம் என சிறப்பு புலனாய்வுக்குழு பரிந்துரை செய்திருந்தது. முக்கிய சாட்சியான சஞ்சீவ் பட் நம்பிக்கையற்றவராக கருதப்படுவதால் இந்த வழக்கைத் தள்ளுபடி செய்ய வேண்டும் என புலனாய்வுக்குழு தெரிவித்திருந்தது. ராமச்சந்திரன் அறிக்கையைச் சிறப்பு புலனாய்வுக்குழு ஏற்றுக் கொள்ள மறுத்தால் வழக்கைத் தாக்கல் செய்த இஹ்ஸான் ஜாப்ரி மனைவி ஷகியா ஜாப்ரியும், பொதுநல ஆர்வலர் தீஸ்தா செடல்வாட்டும் விசாரணை நீதிமன்றத்தில் முறையீடு செய்யலாம்.
நன்றி: இந்நேரம்.காம்
No comments:
Post a Comment