முன்னாள் லிபிய அதிபர் கடாஃபியின் உடல் இரத்தம் தோய்ந்த நிலையில் மிஸ்ராட்டா நகரில் உள்ள ஒரு வணிக மையத்தில் வைக்கப்பட்டுள்ளது. ஆண்களும் பெண்களும் சிறுவர்களுமாக அந்த உடலைப் பார்வையிட அணி வகுத்து வருகின்றனர்.
முன்னதாக, கடாஃபியின் உடலை வெள்ளிக்கிழமையே அடக்கம் செய்வதாக தீர்மானிக்கப்பட்டிருந்தும், எங்கு அடக்கம் செய்வது உள்பட பலவற்றை முடிவு செய்வதில் புரட்சியாளர்களிடையே ஒருமித்த கருத்து ஏற்படாததால், பொதுமக்கள் பார்வையில் படாமல் ஒரு வணிக மையத்தின் குளிர்பதனப்பெட்டியில் (ப்ரீசர்) வைக்கத் தீர்மானிக்கப்பட்டது. ஆனால், பொதுமக்களுக்கு இடம் தெரிந்துவிட்டதால், கடாஃபியின் உடலைப் பார்வையிட கூட்டம் அலைமோதுகிறது.
அதனால், ஆண்களுக்குத் தனியாகவும் பெண்கள், சிறுவர்களுக்குத் தனியாகவும் நேரங்கள் ஒதுக்கி அவ்வுடலைப் பார்வையிட ஏற்பாடுகள் செய்யப்பட்டுள்ளன. மேலும், இறுதிநேரத்தில், புரட்சியாளர்கள் கடாஃபியை அடித்து இழுத்துவந்ததும் ஒளிப்படக் காட்சிகளாக வைக்கப்பட்டுள்ளது.
கடாஃபி உயிருடன் பிடிக்கப்பட்டு, சித்திரவதை செய்யப்பட்டுக் கொலை செய்யப்பட்டது உலக நாடுகளில் பலத்த விமர்சனத்துக்குள்ளாகியுள்ளது குறிப்பிடத்தக்கது!
No comments:
Post a Comment