நடந்து முடிந்த அதிரை உள்ளாட்சி தேர்தலில் தி.மு.க வைச் சேர்ந்த சகோ. அஸ்லம் அவர்கள் மொத்தம் பதிவான 13177 ஓட்டுக்களில் 33.7% ஓட்டுக்கள் அதாவது 4429 பெற்று வெற்றி பெற்றுள்ளார்கள்.
அதிரையில் பல்வேறு அரசியல் கட்சிகளுடன் சுயேட்சைகள் பலர் தங்களுடைய பண பலம், ஆதரவு பலம் மற்றும் சங்கங்களின் ஆதரவுடன் களம் கண்டனர். அவர்களில் ஒவ்வொரு வார்டு ரீதியாக வெற்றி பெற்றவர்களின் சதவிகிதம் மற்றொரு கட்டுரையில் இடம் பெற்றது. அவர்களில் அ.தி.மு.க நான்கு, இ. காங்கிரஸ் ஒன்று தி.மு.க. ஏழு மற்றும் சுயேட்சைகள் ஏழு என வெற்றிப் பெற்றுள்ளார்கள்.
கட்சிகள் பெற்ற ஓட்டுக்கள் சதவிகிதம்
மொத்தம் பதிவான 11827 வார்டு உறுப்பினர்களுக்கான ஒட்டுக்களில் அரசியல் கட்சிகளும் சுயேட்சைகளும் பெற்ற சதவிகிதம் கீழே காண்போம்.
கட்சி / சுயேட்சைகள் | பெற்ற வாக்குகள் | சதவிகிதம் |
சுயேட்சைகள் | 4523 | 38.24% |
தி.மு.க. | 3375 | 28.54% |
அ.தி.மு.க. | 2690 | 22.74% |
இ. காங்கிரஸ் | 606 | 5.12% |
தே.மு.தி.க. | 593 | 5.01% |
CPI | 40 | 0.34% |
No comments:
Post a Comment