ஏகஇறைவனின் திருப்பெயரால்....
அன்புள்ள அதிரை வாக்காளப் பெருமக்களுக்கு அஸ்ஸலாமு அலைக்கும் வரஹ்....
ஜெத்தாவில் இயங்கும் AYDA அமைப்பு சகோ: முனாஃப் அவர்ளுக்கு வாக்களிக்கும் படிக் கேட்டுக் கொண்டுள்ளது .
இந்த அமைப்பு அதிரை பைத்துல் மாலுக்காக ஜெத்தாவில் உருவாக்கபப்ட்டது என்பது குறிப்பிடத் தக்கது...
அதிரை பைத்துல்மால் அதிரை நகர ஏழைகள்> பாட்டாளி மக்கள் பயன் பெறும் நோக்கில் உருவாக்கப்பட்டதாகும் அதனால் அதைப் பொதுவான அமைப்பாக அறிவிக்கப்பட்டது.
அதிரை பைத்துல்மாலின் அங்கமாக இயங்;கக்கூடிய AYDA ஜெத்தாவில் அதிரை வாசிகளைத் திரட்டி நிதி வசூலிக்கும் பொழுது இதுப் பொதுவான அமைப்பு என்றும், தெருபாகுபாடுப் பார்க்காது தனி நபர் துதிப் பாடாது என்றெல்லாம் கூறியே வசூலித்து அமைப்பு நடத்தி இன்று ஊரில் பலர் வேட்பாளர்களாக களத்தில் நிற்கும் பொழுது ஒருதலை பட்சமாக சகோ: முனாஃப் அவர்களுக்கு ஆதரவளித்திருப்பது அதிர்ச்சியாக இருக்கிறது.
சகோ:முனாஃப் அவர்கள் ஹராம்> ஹலாம் பேணுபவர் என்றால் பிற வேட்பாளர்கள் போணாதவர்களா ? ஊர்வாசிகள் கேட்கின்றனர் இதற்கு AYDA விளக்கமளிக்குமா ?
சகோ: முனாஃப் அவர்கள் நல்லவர் என்பதில் நமக்கும் மாற்றுக் கருத்தில்லை ஆனால் அவர் வலலவரல்ல ஊராளுவதற்கு வல்லவராக இருப்பது அவசியம் என்பதை சிறு குழந்தையும் கூட அறிந்து வைத்திருக்கும் ஆனால் AYDA வுக்குப் அறியாமல் போனது புதிராக உள்ளது ?
ஒரு சோறுப் பதம்
வல்லவனுக்கு புல்லும் ஆயுதம் என்பர் சகோ: முனாஃப் அவர்கள் படித்தத் துறையில் எதிர் நிச்சல் இட்டுப் பிராசிக்க முடியவில்லை அதற்குக் காரணம் அவரிடம் போதிய திறமை இல்லாதது தான் அதனால் அதைத் தூக்கி எறிந்து விட்டு மூனாங் கிலாஸ்> நாலாங் கிலாஸ் படித்தவர்கள் செய்யும் ரியல் எஸ்டேட் மற்றும் பத்திரம் முடித்துக் கொடுக்கும் பணியைப் பார்த்து வருகிறார்.
இன்று அதிராம்பட்டிணத்தைச் சேர்ந்த முஸ்லீம் ஆண்> பெண்;கள் ஏராளமானோர் பட்டுக்கோட்டையில் மாற்று மத வழக்கறிஞர்களின் வீட்டு வாசலில் மண்டியிட்டுக் கிடப்பதும்> அவர்களை நோக்கி கூழைக் கும்பிடுப் போடுவதும் அன்றாடம் நடக்கும் கன்றாவிக் காட்சிகளாக இருக்கிறது. இவர் படித்த இந்தத் துறையில் நின்று ஜொலித்து இந்த அவலத்தை நீக்கி இருந்தால் இவரை வல்லவர் எனலாம் ஊராளும் திறமை இவருக்கு இருப்பதாக ஏற்றுக் கொள்ளலாம்.
படிக்கும் போது ஆர்வமாகப் படித்தவர் படித்து முடித்ததும் ஆர்வம் இல்லை என்று வழக்கறிஞர் வேலையை தூக்கி எறிந்தவர் இன்று ஆர்வத்துடன் வேட்பாளராக நின்று நாலை வெற்றிப் பெற்றதும் ஆர்வமில்லை என்று விலகிக் கொண்டால் AYDA நிர்வாகிகிள் வந்து ஊராளுவார்களா ?
ஊர் வாசிகளே சிந்தித்துக் கொள்ளுங்கள் !
இன்னும் ஓரிரு நாட்களே தேர்தலுக்கு இருப்பதால் நல்லவரான>வல்லவரான ம.மீ.சே.பஷீர் அஹமது அவர்களை கை சின்னத்தில் வாக்களித்த வெற்றி பெறச் செய்யுங்கள்.
அஸ்ஸலாமு அலைக்கும் வரஹ்...
அன்புடன் அதிரை ஏ.எம்.ஃபாரூக்
No comments:
Post a Comment