Latest News

சிறுபான்மையினருக்கு இலவச தொழில் பயிற்சி

ஏகஇறைவனின் திருப்பெயரால்....
 பயனுள்ள தகவல்கள்
தஞ்சை மாவட்டத்தில் வசிக்கும் சிறுபான்மை வகுப்பைச் சேர்ந்தவர்களுக்கு அளிக்கப்படும் இலவச தொழில் பயிற்சிகளில் பங்கேற்க அழைப்பு விடுக்கப்பட்டுள்ளது.
இதுகுறித்து மாவட்ட ஆட்சியர் கா. பாஸ்கரன் வெளியிட் செய்திக் குறிப்பு:தஞ்சை மாவட்டத்தில் உள்ள கிறிஸ்தவர், இஸ்லாமியர், சீக்கியர், புத்த மதத்தினர் மற்றும் பார்சி வகுப்பைச் சேர்ந்தவர்களுக்கு சிறுபான்மையினர் பொருளாதார மேம்பாட்டுக் கழகத்தின் சார்பில் திறன் வளர்ப்பு பயிற்சிகள், தேர்ந்தெடுக்கப்பட்ட தனியார் பயிற்சி நிலையங்கள் மூலம் இலவசமாக அளிக்கப்பட உள்ளன. இதற்கான பயிற்சி கட்டனம் பயிற்சி நிலையத்துக்கு அரசால் அளிக்கப்படும்...

எலக்ட்ரிக்கல் வயரிங், ரீவைண்டிங், பிட்டர், வெல்டர் மற்றும் கணினி பயிற்சியும், புடவைகளில் கல் பதித்தல், தையல் பயிற்சி, நவீன ஆடை வடிவமைப்பு மற்றும் ஏர்கண்டிஷனிங் ரெப்ரிஜெரேஷன் தொடர்பான பயிற்சிகள் அளிக்கப்படும்.

பத்தாம் வகுப்பு தேர்ச்சி அல்லது தேர்ச்சி பெறாதவர், குடும்ப ஆண்டு வருமானம் ஒரு லட்சம் ரூபாய்க்கு குறைவாக உள்ளவர், மதிப்பெண் பட்டியல், ஜாதிச் சான்று, குடும்ப அட்டை மற்றும் வருமானச் சான்றுடன் தஞ்சாவூர் மாவட்ட ஆட்சியர் அலுவலகத்தில் இயங்கி வரும் பிற்பட்டோர் மற்றும் சிறுபான்மையினர் நல அலுவலகத்தில் விண்ணப்பிக்கலாம்.

இந்தப் பயிற்சிகளை அளிக்க விரும்பும் தனியார் பயிற்சி நிறுவனங்கள் தங்களது பயிற்சி கட்டண விவரத்துடன் மேற்கண்ட அலுவலகத்தை தொடர்புகொள்ளலாம் என்றார் ஆட்சியர்.

நன்றி : தினமணி
ஆயுத தொழிற்சாலையில் டெக்னீஷியன் பணிகள்.doc

No comments:

Post a Comment

TIYA

WEBSITE DESIGNED BY: NOORUL IBN JAHABER ALI WEBSITE CONTROLLED BY: DOT COLORS
sourceNOORUL IBN JAHABER ALI Copyright © 2015

Theme images by Bim. Powered by Blogger.