அதிராம்பட்டினத்தில் புற்றுநோய்,வாந்தி, பேதி, நெஞ்சில் எரிச்சல், குடற்புண், கண்களில் எரிச்சல், மூச்சு விடுவதில் சிரமம் மற்றும் உணவை விழுங்குவதில் சிரமம் போன்ற உடல் நலக்கேடுகள் உண்டாக கூடிய மாம்பழம் விற்பனை செய்யப்படுகிறது. இது குறித்த ஒரு எச்சரிக்கை செய்தி. இந்த செய்தி நாம் படிக்க மட்டும் அல்ல நமது மக்களிடம் முழுமையாக சேர்க்க வேண்டிய செய்தியும் கூட!
அதிராம்பட்டினம் பேரூராட்சி பகுதியில் (14/07/20011) வியாழக்கிழமை சோதனை மேற்கொண்டு கார்பைடு கல் மூலம் பழுக்கவைக்கப்பட்ட ரூபாய் 5ஆயிரம் மதிப்புள்ள மாம்பழங்கள் பறிமுதல் செய்யப்பட்டு பேருராட்சி உரக்கிடங்கில் புதைக்கப்பட்டதாவும் கார்பைடு கல் மூலம் பழுக்க வைக்கப்பட்ட மாம்பழங்களை விற்கக்கூடாது என்று வியாபாரிகளுக்கு சுகாதார துறை அதிகாரிகள் அறிவுறுத்தியதாகவும் ஒரு நாளிதழ் செய்தி வெளியிட்டுள்ளது...
கார்பைடு கல் மூலம் பழுக்கவைத்த இந்த வியாபாரிகள் மீது சட்ட நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளதாகவோ, அபராதம் விதிக்கப்பட்டதாகவோ எந்த தகவல்களும் அந்த செய்தியில் இல்லை.
கால்சியம் கார்பைடு உபயோகித்து மாம்பழங்களை பழுக்கவைப்பதால் ஏற்படும் தீமைகள்
கால்சியம் கார்பைடு:
இது ஒரு ரசாயனப் பொருள். சுத்த மான ரசாயனப் பொருள் வெண்மை நிறமாகவும், சற்று கலப்படமான நிலை யில் கருப்பு கலந்த சாம்பல் நிறத்துடனும் இருக்கும். வெள்ளைப்பூண்டின் வாசனை சிறிதளவு இருக் கும். இதில் ஆர்சனிக் மற் றும் பாஸ்பரஸ் ஹைட்ரை டு போன்ற நச்சுப் பொருட் கள் இருக்கும். இவற்றின் மீது ஈரம் பட்டவுடன் அசிட்டிலின் என்ற வாயுவை வெளி யேற்றுகின்றது. இவ்வாயு பழங்களைப் பழுக்கவைக்கின்றது. இதன் விலை கிலோ ரூ.25-30
இதன் விலை கிலோ ரூ.25-30 வரை இருக்கும். ஒரு கிலோ இவ்வுப்பைக் கொண்டு சுமார் 200 கிலோ வரை மாம்பழங் களை பழுக்க வைக்க முடி யும். தேவையான அளவு கார் பைடு உப்பை ஒரு பேப்பரில் கட்டி பழப்பெட்டிகளை லாரி யிலோ குடோனிலோ அடுக் கும் போது அதனுள் வைத்து விட்டால் 24-48 மணி நேரத்தி ற்குள் பழங்களின் மேற்தோல் முழுவதும் ரகத்திற்கு ஏற்ற வாறு கலர் மாறிவிடும். முற் றிய காய்களிலுள்ள ஈரம் மற் றும் காய்கள் சுவாசிக்கும் போது ஏற்படக்கூடிய வெப்பத்தா லும் காய்கள் எளிதில் கலர் மாற உதவுகின்றன.
பழுக்கும் முறை:
முற்றாத காய்களை பழுக்கவைக்க சற்றுஅதிகமாக கற்கள் வை க்க வேண்டும். கற்கள் மூலம் பழுத்த பழங்க ளின் மேல்தோல் மட்டு மே மஞ்சள் நிறமாக மாறும். அதன் உள்ளே எந்தவிதமான ரசாயன மாற்றம் இன்றி அப்படியே இருக்கும். அதனால் இனிப்பு சுவை குறைந்து பழங்கள் மணமின்றி இருக்கும். இயற் கையிலேயே பழுத்த பழங்களின் மேற்தோல் ஒரே சீராக கலர் மாறி இருக்காது. ஆனால் கார்பைடு உப யோகித்து பழுக்க வை த்த பழங்களின் மேற் தோல் ஒரே சீராக மஞ் சள் நிறமாகத் தோற்ற மளிக்கும். மணம் குன் றி இருக்கும். இதை வைத்தே கல் வைத்து பழுக்க வைத்த பழங்க ளைக் கண்டறியலாம். இந்த வேதிப்பொருள் மேலைநாடு களில் தடை செய்யப்பட்டுள்ளது.
இந்த அநியாயத்தை பாருங்கள் ....
Posted: 16 Jul 2011 12:52 AM PDT
ஊர்ப்புற நிர்வாகத்திற்காக அரசு சார்பில் ஒவ்வொரு ஊருக்கும் என கிராம நிர்வாக அலுவலர் (Village Administrative Officer – VAO ) நியமிக்கப்படுவார். அதன் அடிப்படையில் தற்போது நமதூரைச் சார்ந்த பகுதிகளுக்கு என இரு வி.ஏ.ஓ-க்கள் நியமிக்கப்பட்டிருக்கின்றார்கள். அதில் ஒருவரது அலுவலகம் அதிராம்பட்டினத்திலும், இன்னொருவர் அதிரையின் கடலோரக்கரையான ஏரிப்புறக்கரையிலும் இருக்கின்றனர்.மேலத்தெரு, கடற்கரைத் தெரு , CMP லைன் ஆகிய பகுதிகளைச் சார்ந்தவர்கள் அரசு சார்ந்த அலுவல்களுக்கு ஏரிப்புறக்கரையில் இருக்கும் கிராம நிர்வாக அலுவலரிடம் செல்லவேண்டி இருக்கின்றது. அரசிடம் இருந்து மக்களைச் சென்றடைய வேண்டிய நலத்திட்டங்களுக்கு சான்று பெறுவதற்கு ஆண்களும் பெண்களும் ஏறிப்புறக்கரைக்கு சென்று, அங்கு காத்திருந்து நமக்கான சான்றிதழ்களை பெற்று வரவேண்டும் . . அப்படி செல்லும் நேரங்களில், பெரும்பாலும் அலுவலர் அவரது அலுவலகத்தில் இருப்பதில்லை. இதனால் பெண்கள் உள்ளிட்ட பொதுமக்கள் நீண்ட நேரம் காத்திருந்தும் பயன் இல்லாமல் வீடு திரும்புகின்றனர் .
ஏரிப்புறக்கரையில் நீண்ட நேரம் காத்துக் கிடந்த மக்களின் அல்லலை நீங்களே பாருங்கள். கிராம நிர்வாக அலுவலரின் அலவலகத்தில் பல மணிநேரம் காத்திருந்தும் அலுவலர் கடைசிவரை வராமல் போனதனால் ஏமாற்றமே மிஞ்சியது.
நன்றி
அதிரை BBC நிருபர் குழு.
No comments:
Post a Comment