”சமச்சீர் கல்வி தரம் குறைவானது” என திட்டமிட்டு பரப்பப்படும் அவதூறுகளை கேவியேதும் கேட்காமல் ஏற்பவர்கள் இந்த கட்டுரையை வாசித்து பயன்பெறட்டும் !
சமச்சீர்கல்வி பற்றிய விவாதங்களில் ஒன்றைக் கவனிக்க முடிந்தது. சமச்சீர் கல்வி வேண்டாம் எனச் சொன்னவர்கள் ‘சமச்சீர் கல்விப் பாடப்புத்தகங்களின் தரம் குறைவானது’ எனச் சொன்னார்கள். குறைந்தது 10 பேராவது இதனை என்னிடம் சொல்லியுள்ளனர். அவர்களிடம் அந்த நூல்களை வாசித்தீர்களா எனக்கேட்டேன். ஒருவரும் இல்லை என்றார்கள். மேலும் தரம் குறைவானதென எல்லோரும் சொல்கின்றனர் என்பதால் அவர்களும் அவ்வாறு சொல்வதாக ஒப்புக் கொண்டனர். அப்படி என்றால் சமச்சீர் கல்விப்பாட நூல்களில் என்ன சொல்லப்பட்டுள்ளன என்பதை அறிவதுதான் முதன்மையானதெனக் கருதி அரசின் இணையதளத்தில் போய்ப் பார்த்தேன். அதிலிருந்து பாடநூல்கள் எடுக்கப்பட்டு விட்டன. கூகிளில் தேடி ஒரு தனிநபரது இணையதளத்தில் இருந்து 5,7,8,9,10 ஆம் வகுப்புகளுக்கான பாடநூல்களை மட்டுமே எடுத்துப் படிக்க முடிந்தது. அவற்றில் கணக்குப் பாடங்களைத் தவிர பிறநூல்கள் அனைத்தையும் வாசித்ததில் இருந்து சில அம்சங்களைச் சொல்லலாம் எனக் கருதுகிறேன்.
பாடத்திட்டங்களை அனைத்துத் தரப்பினரின் பங்கெடுப்போடுதான் நூல்களாக்கி உள்ளனர். மெட்ரிக், ஆங்கிலோ இந்தியன், ஓரியன்டல், அரசுப்பள்ளி ஆசிரியர்கள் அனைவரும் இணைந்துதான் நூல்களை உருவாக்கி உள்ளனர். பல நூல்களின் ஆசிரியர் குழுக்களில் தமிழகத்தின் சிறந்த கல்லூரிகளின் பேராசிரியர்களும் இடம்பெற்றுள்ளனர். 10 ஆம் வகுப்பு அறிவியல் நூலுக்கு தலைமை வகித்தவர் சென்னை ஐஐடி பேராசிரியர் ஆவார்...
பாடப்புத்தகங்கள் மனப்பாடம் செய்ய என இல்லாமல் சிந்திக்க, கலந்துரையாட, சுகமான வாசிப்புக்கு எனும் நோக்கில் வண்ணப்படங்கள், எளிய வரைபடங்கள் மூலம் அழகிய லே-அவுட்டில் அருமையாக இருந்தது.
பாட வாரியாக அவற்றில் நான் கண்ட நிறை குறைகளை இனி பார்ப்போம்.
அறிவியல்பாடம்:
1) ஐந்தாம் வகுப்பு:
ஆசிரியர் குழு: லயோலா கல்லூரி பேராசிரியர், சென்னை புனித பீட்ஸ் ஆங்கிலோ இந்தியன் பள்ளி ஆசிரியர், மதுரை எஸ் பி ஓ ஏ மெட்ரிக் பள்ளி ஆசிரியர்.
· பசுமை உலகம் பற்றிய பாடம், உரையாடல் வடிவில் உள்ளது. விதை பரவுதலின் வகைகள் வண்ணப்படங்களால் மனதில் பதியும்வண்ணம் பதிப்பிக்கப்பட்டுள்ளது.
· நாம் இன்று உண்ணும் சில காய்கறிகளின் பூர்வீகம் பற்றிய தகவல்கள் இடம்பெற்றுள்ளன. (தர்பூசணி, வெண்டை- ஆப்ரிக்கா, தக்காளி,கொய்யா – தென் அமெரிக்கா)
· விலங்குகளின் வாழ்விடமான காடு சுருங்குவதே விலங்குகள் ஊருக்குள் வரக்காரணம் என்பதை ஆழ நெஞ்சில் பதியவைத்துள்ளனர்.
· எளிதில் அனைவரும் செய்து பார்க்கும் சோதனை: பாட்டில் ஒன்றில் முட்டையுடன் கூடிய எருக்கிலையைப் போட்டு அது புழு,கூட்டுப்புழு, பட்டாம்பூச்சி என வளர்ச்சியடவதைப் பார்க்கச் செய்தல்.
· விண்வெளிப்பயணம் கட்டுரையில் அண்மையில் ஏவப்பட்ட இந்தியாவின் சந்திராயனும் இடம்பெற்றுள்ளது.
· நீர் எந்த ஒரு தனிமனிதனுக்கும் சொந்தமானதல்ல. அது பொது உடமையானது என ஒரு பாடம் வலியுறுத்துகிறது.
2) ஏழாம் வகுப்பு:
ஆசிரியர் குழு
No comments:
Post a Comment