பெரம்பலூர்: அமைச்சர் மரியம் பிச்சை பெரம்பலூர் அருகே சாலை விபத்தில் கோரமாக உயிரிழந்தது தொடர்பான சிபிசிஐடி விசாரணை தொடங்கியது.
மரியம் பிச்சையின் காரை ஓட்டிச் சென்ற சென்னை டிரைவர் ஆனந்த்திடம், சிபிசிஐடி கூடுதல் டிஜிபி அர்ச்சனா ராமசுந்தரம் விசாரணை நடத்தியுள்ளார். மேலும், கார் மீது மோதிய லாரியைப் பிடிக்கும் நடவடிக்கைகளும் துரிதப்படுத்தப்பட்டுள்ளன.
கடந்த 23ம் தேதி பெரம்பலூர் அருகே பாடாலூர் என்ற இடத்தில் வைத்து இந்த விபத்து நடந்தது. இதில் மரியம் பிச்சை பலத்த காயத்துடன் உயிரிழந்தார். டிரைவர் ஆனந்த் உள்ளிட்டோர் காயங்களுடன் உயிர் தப்பினர்.
இந்த சம்பவம் மற்றும் விபத்து நேர்ந்த விதம் ஆகியவற்றை வைத்து பல்வேறு சந்தேகங்கள் எழுந்தன. இது திட்டமிட்ட சதியாக இருக்குமோ என்ற சந்தேகமும் வலுத்தது. இதையடுத்து சிபிசிஐடி விசாரணைக்கு முதல்வர் ஜெயலலிதா உத்தரவிட்டார்.
இதைத் தொடர்ந்து தற்போது சிபிசிஐடி போலீஸாரின் விசாரணை தொடங்கியுள்ளது.
பெரம்பலூர் வந்த சிபிசிஐடி கூடுதல் டிஜிபி அர்ச்சனா ராமசுந்தரம், டிரைவர் ஆனந்த்திடம் நேரடியாக விசாரணை நடத்தினார்.
நேற்று விபத்து நடந்த இடத்தை டிஐஜி ஸ்ரீதர் நேரில் பார்த்து ஆய்வு நடத்தினார். சி.பி.சி.ஐ.டி. எஸ்.பி. ராஜேஸ்வரி, 3 டிஎஸ்பிக்கள், 9 இன்ஸ்பெக்டர்கள் மற்றும் போலீசாரும், தடய அறிவியல் நிபுணர்களும் வந்திருந்தனர்.
சென்னை மற்றும் திருச்சி, தஞ்சை ஒருங்கிணைந்த மாவட்ட சி.பி.சி.ஐ.டி. போலீசார் அனைவரும் நேற்று பாடாலூர் விரைந்து வந்து அங்கேயே முகாமிட்டுள்ளனர்.
விசாரணை குறித்து டிஐஜி ஸ்ரீதர் கூறுகையில், சில தகவல்கள் கிடைத்துள்ளன. அதை வைத்து விசாரித்து வருகிறோம். மாயமான லாரி எங்கே போனது என்பது குறித்து தீவிர விசாரணை நடந்து வருகிறது.
அந்த லாரியைக் கண்டுபிடிக்க 9 தனிப்படைகள் அமைக்கப்பட்டுள்ளன. இந்த லாரி குறித்து சில தகவல்கள் கிடைத்துள்ளன. எனவே விரைவில் அந்த லாரி சிக்கும், டிரைவரையும் பிடித்து விடுவோம்.
அது எந்த வகையான லாரி என்பது தெரியவில்லை. டிரைவர் சிக்கினால்தான் அதுகுறித்துத் தெரியும்.
இப்பகுதியில் உள்ள கல் குவாரி ஏதேனும் ஒன்றில் லாரியை ஒளித்து வைத்திருக்கலாம் அல்லது காட்டுப்பகுதியில் மறைத்து வைத்திருக்கலாம் என சந்தேகிக்கிறோம். அதுகுறித்து தேடுதல் வேட்டை நடந்து வருகிறது என்றார்.
இதற்கிடையே சம்பந்தப்பட்ட லாரி ஆந்திராவில் பதிவு செய்யப்பட்டது என்று ஒரு தகவல் வெளியாகியுள்ளது. இதுதொடர்பான கோணத்திலும் விசாரணை மற்றும் தேடுதல் வேட்டை முடுக்கி விடப்பட்டுள்ளது.

No comments:
Post a Comment