முந்தைய தமிழக அரசு 1 மற்றும் 6 ஆம் வகுப்புகளில் சமச்சீர் கல்வியை நடைமுறைப் படுத்தியது. மேலும் 2011 ஜூன் மாதம் தொடங்கும் கல்வியாண்டில் 10ஆம் வகுப்பு வரை சமச்சீர் கல்வி முறை அமல்படுத்தப்படும் என்றும் முடிவு செய்திருந்தது.
புதிதாகப் பொறுப்பேற்ற ஜெயலலிதா தலைமையிலான தமிழக அரசு, சமச்சீர் கல்வி முறையை நிறுத்திவிட்டு, அடுத்த ஆண்டுமுதல் புதிய பாடத்திட்டப்படி நடத்துவதற்கு முடிவெடுத்தது.
இம்முடிவினை எதிர்த்து, இந்தக் கல்வியாண்டிலேயே சமச்சீர் கல்வியை அமல்படுத்த வேண்டும் என்று உத்தரவிடக் கோரி சென்னை உயர் நீதிமன்றத்தில் வழக்கறிஞர் கே.ஷியாம் சுந்தர் அளித்துள்ள மனுவில் கூறப்பட்டுள்ளதாவது:
"தமிழகத்தில் சமச்சீர் கல்வியை அமல்படுத்துவது பற்றி ஆராய பாரதிதாசன் பல்கலைக்கழக முன்னாள் துணை வேந்தர் எஸ்.முத்துகுமரன் தலைமையிலான குழு அளித்த பரிந்துரைகளின் பேரில், கடந்த கல்வியாண்டில் 1, மற்றும் 6ஆம் வகுப்புகளில் சமச்சீர் கல்வி முறை அமல்படுத்தப்பட்டது.
இதற்காக சமச்சீர் கல்வி முறையிலான புதிய பாடத் திட்டத்தின்படி ரூ.200 கோடி செலவில் 9 கோடி புத்தகங்கள் அச்சிடக்கப்பட்டுள்ளன.
இந்நிலையில் புதிதாகப் பொறுப்பேற்றுள்ள ஜெயலலிதா தலைமையிலான தமிழக அரசு, பழைய பாடத் திட்ட முறையே தொடரும் என்றும், சமச்சீர் கல்வி முறை பற்றி ஆராய புதிதாக ஒரு நிபுணர் குழு அமைக்கப்படும் என்றும் முடிவெடுத்துள்ளது. அரசின் இந்த முடிவு அரசியல் சார்ந்த முடிவாகும் என்பதால் அறிவிக்கப்பட்டபடி இந்தக் கல்வியாண்டிலேயே 10ஆம் வகுப்பு வரை சமச்சீர் கல்வி முறையை அமல்படுத்த நீதிமன்றம் உத்தரவிட வேண்டும்" என்று மனுவில் கூறப்பட்டுள்ளது. இந்த மனு இன்று விசாரணைக்கு வருகிறது.

நன்றி: இந்நேரம்.காம்
தகவல்: அதிரை அபு ஜுபைர்
No comments:
Post a Comment