சமீபத்தில் வெளியான "பா" இந்திப் படத்தில் அபிஷேக் பச்சனின் மகனாக நடித்த அமிதாப் பச்சன், ப்ரேஜிரியா ( ) என்ற மரபு ரீதியான நோயால் பாதிக்கப்பட்டு இருப்பார். பெரிய தலையுடன் இளம் வயதிலேயே முதுமையான தோற்றத்தைக் கொடுத்துவிடும் நோய் அது ;பா" படத்தில் மூலம் மரபியல் ரீதியான நோய்களைப் பற்றி விழிப்பு உணர்வு பரவியது.
ப்ரோஜிரியா மட்டும் அல்ல...இன்னும் பரம்பரை ரீதியாக வரும் எத்தனையோ நோய்கள் குணப்படுத்த முடியாத நிலையில் இருக்கிறது. ஆனால் சில பாரம்பரிய நொய்களைப் பிறக்கும்போதே கண்டறிவதின் மூலம் குணப்படுத்த முடியும். இந்தியாவுக்கு இந்த சோதனை புதிது ஆனால், உலகில் கிட்டத்தட்ட 52 நாடுகளில் குழந்தை பிறந்த உடன் ஏதேனும் குறைபாடுகள் உள்ளனவா என்பதைக் கண்டறியும் பரிசோதனைகள் நடைமுறையில் உள்ளது. சில மேற்கத்திய நாடுகள் இதைத் தங்கள் குடிமக்களுக்கு கட்டாயமாகவும் இலவசமாகவும் செய்கின்றன. இதனால் பிறகாலத்தில் அந்தக் குழந்தைகளுக்குப் பெரிய அளவில் பாதிப்புகள் வருவது தவிர்க்கப்படுகிறது...
இந்தியாவில் இந்த பரிசோதனை இப்போது பிரபலமாகி வருகிறது. உலக சுகாதார நிறுவன அறிக்கையின்படி, உலகில் 25- க்கு ஒரு குழந்தை மரபியல் குறைபாட்டுடன் பிறக்கிறது ஐந்தில் ஒரு குடும்ப மரபியல் குறைபாடுகொண்டதாக உள்ளது. இந்தியாவில் 40 நொடிகளுக்கு ஒரு குழந்தை மரபியல் குறைபாட்டுடன் பிறக்கிறது. ஆனால் இதுபற்றிய விழிப்பு உணர்வு மக்கள் மத்தியில் இல்லை.
பிறந்த குழந்தைகளுக்கு மரபியல் குறைபாடு உள்ளதா என்பதைக் கண்டறியப் பரிசோதனை நடத்தும் ப்ரிவென்டைன் லை ப் கேர் நிறுவனத்தின் ஜெனிடிக் ஸ்கிரீமிங் தலைவர் டாக்டர் ரிஷி தீஷித்திடம் பேசினோம்,
மரபியல் பிரச்னை என்பது மூதாதையரிடம் இருந்து வருவது. மனித உடலில் உள்ள ஒவ்வொரு செல்லிலும் இருக்கும் மரபனுக்கள்தான் மரபுரிதியான குணங்களைச் சந்ததிகளுக்கு எடுத்துச் செல்கின்றன. பழக்க வழக்கங்கள்,தோலின் நிறம், கருவிழியின் நிறம். முடியின் நிறம் வரை எல்லாமே பெற்றோர் மூலமாக குழந்தைகளுக்குக் கடத்தப்படுகின்றது, அதேபோன்று அவர்களுக்கு உள்ள் குறைபாடுகளும் கடத்தப்படலாம்.
நான் படித விசையத்தை உங்கள் பார்வைக்கு தருகின்றேன் இதை நான் ஏன் உங்கள் பார்வைக்கு தருகிறேன் என்றால் நமதூரில் குடுப ரீதியான் திருமண பந்தங்கள் நிறையாவே உண்டு ஆகையால் இதில் நாமும் விழிப்பு உணர்வுடன் இருக்கவேண்டும் என்ற என்னத்தில் உங்கள் பார்வைக்கு வைக்கிறேன்.
மரபியல், உட்சுரப்பியல், வளர்சிதை மாற்ற நோய்கள் குழந்தைக்கு இருக்கிறதா என்பதைக் கண்டறிவதன் மூலமாக கிட்டத்தட்ட 101 வகையான பரம்பரை ரீதியான நோய்களைப் கண்டறிந்து ஆரம்பத்திலேயே குணப்படுத்த முடியும்.
நன்றி : ஜுனியர்விகடன்
தகவல் : அதிரை M.அல்மாஸ்
No comments:
Post a Comment