தமிழக சட்டசபை தேர்தலில் போட்டியிடும், தி.மு.க., - காங்கிரஸ் கூட்டணி வேட்பாளர்களை ஆதரித்து, தமிழகத்தில் இளைஞர் காங்கிரஸ் பொறுப்பாளர் ராகுல் தேர்தல் பிரசாரம் செய்ய வருவாரா? என்ற எதிர்பார்ப்பு காங்கிரசார் மத்தியில் ஏற்பட்டுள்ளது.
தமிழகத்தில் கடந்த ஏழு ஆண்டுகளாக, காங்கிரசுடன் தி.மு.க., கூட்டணி வைத்துள்ளது. இரண்டு லோக்சபா தேர்தல், மற்றும் ஒரு சட்டசபை தேர்தலை இந்த கூட்டணி தொடர்ந்து சந்தித்த நிலையில், இரண்டாவது சட்டசபை தேர்தலை தற்போது இரு கட்சிகளும் சந்திக்கின்றன.இதில், தி.மு.க., காங்., கூட்டணி இடையே தொகுதிப் பங்கீடு ஏற்படுவதில், கருத்து வேறுபாடுகள் ஏற்பட்டன. காங்கிரசுக்கு 63 சீட்டுகள் தர முடியாது என தி.மு.க., தரப்பு திட்டவட்டமாக கூறியது.இது தொடர்பாக உயர் நிலைக்குழு கூட்டத்தை நடத்தி "காங்., விரும்பாத கூட்டணியை தொடர விரும்பவில்லை' என, தி.மு.க., தீர்மானம் நிறைவேற்றியது. பின், இரு தரப்பினரும் டில்லி சென்று சோனியா முன்னிலையில் சமரச பேச்சு நடத்தி, உடைந்த கூட்டணியை ஒட்ட வைத்தனர்...
கூட்டணி விரிசல் குறித்து விசாரித்ததில், இளைஞர் காங்., பொறுப்பாளரும், காங்கிரஸ் பொதுச்செயலருமான ராகுல் ஆதரவுடன், அ.தி.மு.க., எம்.பி., ஒருவர் கூட்டணி பேச்சு நடத்தியதாக, தி.மு.க.,வுக்கு வந்த தகவல்கள் தான் பிரச்னையை பூதாகரமாக்கியது தெரிந்தது.கடந்த காலங்களில் நடந்த சம்பவங்களை பார்க்கும் போது, ராகுல் மீது தி.மு.க.,வுக்கு அதிருப்தி உள்ளதாகவே காங்கிரசார் கூறுகின்றனர்.தமிழகத்திற்கு வந்து மாணவர்களை சந்தித்து பேசியது, இளைஞர் காங்கிரஸ் நிர்வாகிகளை சத்தியமூர்த்தி பவனில் சந்தித்து பேசியது, திருச்சியில் நடந்த பொதுக்கூட்டம் என, பல நிகழ்ச்சிகளுக்கு சென்னைக்கும், தமிழகத்திற்கும் வந்த ராகுல் ஒரு முறை கூட தி.மு.க., தலைவர் கருணாநிதியை மரியாதை நிமித்தமாக சந்திக்கவில்லை.இது தி.மு.க., மற்றும் காங்., தலைவர்களுக்கு இடையே மனக் கசப்பை ஏற்படுத்தியது.
இது குறித்து, ராகுல் ஒரு முறை பேசும் போது,"டில்லியில் உள்ள தன் வீட்டில் பல முறை தி.மு.க., தலைவர் கருணாநிதியை சந்தித்திருக்கிறேன்' என கூறியிருந்தார். அதே போல், "தமிழகத்தில் காங்கிரஸ் ஆட்சியமைய வேண்டும். இளைஞர் காங்.,கில் ஒருவரை முதல்வராக்குவேன்' எனவும் கூறியிருந்தார்.
ராகுலின் இந்த அதிரடி பிரசாரம் தி.மு.க.,வை அதிருப்தியடைய செய்தது. மேலும், இந்திராவுடன் அரசியல் நடத்திய கருணாநிதியை, சென்னைக்கு வரும் போது கூட, ராகுல் சந்திக்காமல் தவிர்த்ததால், தி.மு.க., தரப்புக்கு சில மனக் கசப்புகள் இருந்து வருகிறது.இந்நிலையில், இருதரப்பிலும் சமாதானமாகி மீண்டும் கூட்டணியை புதுப்பித்துள்ள நிலையில், காங்கிரஸ் சார்பில் போட்டியிடும் 63 நாயன்மார்களை ஆதரித்தும், தி.மு.க., கூட்டணி வேட்பாளர்களை ஆதரித்தும் பிரசாரம் செய்ய ராகுல் வருவாரா? என இளைஞர் காங்கிரசார் எதிர்பார்த்துள்ளனர்.
இது குறித்து, இளைஞர் காங்கிரசார் சிலர் கூறும் போது, "தி.மு.க., தலைவரை மரியாதை நிமித்தமாக சந்தித்து கூட்டணியை இன்னும் மகிழ்ச்சியான கூட்டணியாக மாற்றும் வகையில், ராகுல் தமிழகத்திற்கு வர வேண்டும். தி.மு.க., தலைவர் கருணாநிதியுடன் ஒரே மேடையில் பேச வேண்டும்' என்றனர்.
பீகார் மற்றும் உத்தரப்பிரதேச சட்டசபை தேர்தலில் காங்கிரசை வெற்றி பெற வைக்க ராகுல், பிரியங்காவும் அயராது பாடுபட்டு, குடிசைகளில் தூங்கி, ஏழை மூதாட்டிகளுடன் உணவருந்தி, கிராமத்து பெண்களை சந்தித்து பல வகைகளில
தகவல் அதிரை M. அல்மாஸ்
No comments:
Post a Comment