சத்திஸ்கர் மாநிலம் பிலாய் துர்க் எனும் இடத்தில், பள்ளிவாசல் ஒன்றில், சர்க்கரை நோய்க்கு மூலிகை மருந்து கொடுத்து வருகின்றனர். ஆண்டுக் கணக்கில் சர்க்கரை நோய் பாதிப்பு இருந்தாலும், அவர்கள் அளிக்கும் மூலிகை மருந்து மூலம், நோயிலிருந்து எளிதில் விடுபடுவதாகக் கூறப்படுகிறது.
சத்திஸ்கருக்குச் சிகிச்சைக்கு செல்பவர்களில், 50 சதவீதம் பேர் தமிழகத்தைச் சேர்ந்தவர்கள் என்று தெரிய வருகிறது. இந்த எண்ணிக்கை நாளுக்கு நாள் கூடி வருவதாகவும் தெரிகிறது.
இதுபற்றி நாமக்கல் வழிகாட்டி நலச்சங்கத் தலைவர் சிவகுமார் நிருபர்களிடம் கூறுகையில்:
இதுபற்றி நாமக்கல் வழிகாட்டி நலச்சங்கத் தலைவர் சிவகுமார் நிருபர்களிடம் கூறுகையில்:
"சர்க்கரை நோய்க்கு, சத்திஸ்கர் மாநிலம் பிலாய் துர்க் எனும் இடத்தில் உள்ள பள்ளிவாசல் ஒன்றில் மருந்து கொடுக்கின்றனர். அந்த மருந்தை, ஒட்டகப் பாலுடன் கலந்து தருகின்றனர்.
நாள்தோறும், காலை 6.30 மணி முதல், 11 மணி வரை சிகிச்சை அளிக்கின்றனர். சர்க்கரை நோய் பாதிப்பு ஆரம்ப கட்டத்தில் உள்ளவர்கள், ஒரு முறை மருந்து சாப்பிடுவதன் மூலம் நோய் கட்டுப்பாட்டுக்கு வருவதாக தெரிவிக்கின்றனர்.
மருந்தை, அங்கேயே தங்கி சாப்பிட்டு திரும்ப வேண்டும். இதற்காக, குறிப்பிட்ட தொகை நிர்ணயம் செய்யப்பட்டுள்ளது. நாட்டின் பல பகுதியிலிருந்தும் அங்கு வருகின்றனர். ஆண்டு முழுவதும், சர்க்கரை நோய்க்கு மருந்து வழங்குகின்றனர். நூற்றுக்கு, 70 சதவீதம் பேர், அங்கு மருந்து சாப்பிட்டதன் மூலம், நோய் கட்டுப்பாட்டுக்கு வந்ததாக தெரிவிக்கின்றனர்." என்று சிவக்குமார் தெரிவித்துள்ளார்.
pls detail at baskarans1983@gmail.com
ReplyDelete