முப்பதாண்டு கால சர்வாதிகார ஆட்சியை அகற்றிவிட்ட பெருமிதத்தில் எகிப்தில் மகிழ்ச்சி வெள்ளம் கரை புரண்டு ஓடிக்கொண்டிருக்கையில் அந்நாட்டை தற்சமயம் ஆளுமை செய்யும் உயர்மட்ட இராணுவக் குழுமம் சில கட்டுப்பாடுகளை விதித்துள்ளது:
அவற்றுள், அரசு அதிகாரிகளின் வெளிநாட்டுப் பயணத் தடையும் ஒன்று. அண்மையில் அவ்வாறு கடுமையாகத் தடை செய்யப்பட்டவர்களுள் அண்மைப் பிரதமர் அஹ்மத் ஷfபீக்கும் அடங்குவார்.
"எகிப்தில் இரண்டே மாதத்திற்குள் புதிய அரசு அமைய வழி வகுக்கப்படும்" என்று இராணுவ உயர்நிலைக் குழுமம் தெரிவித்துள்ளது.
துனீசியா, எகிப்து, அல்ஜீரியா என்று தொடரும் இந்த மக்கள் எழுச்சி ஏமனிலும் உச்ச கட்டம் அடைந்துள்ளது. ஏமன் நாட்டில் எதிரொலிக்கும் புரட்சி 30 ஆண்டுகளுக்கு மேலாக ஆட்சி பீடத்தில் அமர்ந்திருக்கும் அதிபர் அலி அப்துல்லாஹ் சாலேவுக்கு எதிராக போர்க்குரல் எழுப்பியுள்ளது. அதிபர் பதவி விலக வலியுறுத்தி பெருந்திரளானோர் நேற்றும் ஆர்ப்பாட்டத்தில் குதித்தனர். மக்கள் வெள்ளத்தை கட்டுப்படுத்த இராணுவமும் காவல்துறையினரும் குவிக்கப்பட்டுள்ளனர். நாடெங்கும் பதட்டமான சூழல் நிலவுகிறது.
No comments:
Post a Comment