இந்தியாவில் பிரபலமானதாக கருதப்படும் அம்பாசிடர் கார் இனி புதிய வடிவில் வர இருப்பதாக ஹிந்துஸ்தான் மோட்டார் நிறுவனம் தெரிவித்துள்ளது.
பிர்லா குழுமத்தைச் சேர்ந்த ஹிந்துஸ்தான் மோட்டார் நிறுவனம் அம்பாசிடர் கார்களை தயாரித்து விற்பனைச் செய்து வருகின்றது. இந்தியாவில் பெரும்பாலான அரசுத்துறை நிறுவனங்களில் அம்பாசிடர் கார்களே அதிகமாக பயன்படுத்தப்பட்டு வருமளவுக்கு அசைக்க முடியாத இடத்தைப் பெற்றுள்ள இந்த கார்கள் இனி புதிய வடிவமைப்பில் தயாரிக்கப்படவுள்ளன.
புதிய வடிவமைப்பில் அம்பாசிடர் கார்களை தயாரிப்பதற்காக புனேயிலுள்ள ஒரு நிறுவனத்துடன் ஹிந்துஸ்தான் மோட்டார் நிறுவனம் ஒப்பந்தம் செய்துள்ளது. இந்த வகை புதிய கார்கள் மக்களைக் கவரும் வகையில் வடிவமைக்கப்படும் என்று எதிர்பார்க்கப்படுகின்றது.
No comments:
Post a Comment