2G ஸ்பெக்ட்ரம் வழக்கில் உச்சநீதிமன்றம் கடும் கணடனத்தை பதிவு செய்து இருந்த நிலையில் ஊழல் தடுப்பு கண்காணிப்பு ஆணையர் பீ.ஜே தாமஸ் நியமனம் குறித்தும் உச்சநீதிமன்றம் மத்திய அரசை நோக்கி கேள்வி எழுப்பியுள்ளது.
ஊழல் தடுப்பு கண்காணிப்பு ஆணையரான பிரதியுஸ் சின்ஹா ஓய்வு பெற்றைதையடுத்து கடந்த செப்டம்பர் மாதம் கேரளா மாநிலத்தை சேர்ந்த ஐ.ஏ.எஸ் அதிகாரியான பீ.ஜே தாமசை புதிய ஊழல் தடுப்பு கண்காணிப்பு ஆணையராக மத்திய அரசு நியமனம் செய்து உத்தரவிட்டது.
பீ ஜே தாமஸ், 1992 ம் வருட கருணாகரன் தலைமையிலான காங்கிரஸ் ஆட்சியின் போது பொது விநியோகத் துறை செயலாளராக இருந்தார். அப்போது மலேசியாவை சேர்ந்த ஒரு நிறுவனத்திடம் இருந்து பாமாயில் இறக்குமதி செய்ததில் அரசுக்கு 2 .08 கோடி ரூபாய் அளவுக்கு இழப்பை ஏற்படுத்தி விட்டார் என குற்றச்சாட்டு எழுந்தது.
இது குறித்த வழக்கில் பீ ஜே தாமஸ் ஜாமீன் பெற்றுள்ளதும் வழக்கு நிலுவையில் உள்ளதும் தெரிய வந்ததை அடுத்து ஊழல் வழக்கில் தொடர்புடைய ஒருவர் எப்படி உயரிய பதவியான ஊழல் தடுப்பு கண்காணிப்பு ஆணையராக நியமிக்கப் பட்டார் என்று உச்சநீதிமன்ற நீதிபதிகள் கேள்வி எழுப்பியுள்ளனர்.

No comments:
Post a Comment