இந்திய உள்துறை சம்பந்தமான ரகசியங்களை விற்றதாக டெல்லியில் ஐஏஎஸ் அதிகாரி ரவிந்தர் சிங் என்பவர் கைது செய்யப்பட்டுள்ளார். மத்திய உள்துறை அமைச்சகத்தின் உள்நாட்டு பாதுகாப்பு இயக்குநர் பதவியில் இருக்கும் ரவிந்தர் சிங், இந்திய பாதுகாப்பின் ரகசிய தகவல்களை பாகிஸ்தானுக்கு கூறியதாக உளவுத்துறைக்கு சந்தேகம் எழுந்தது. இதையடுத்து அவரது வீட்டில் திடீர் சோதனை நடந்துள்ளது. இந்தச் சோதனைக்குப் பின்னர் அவர் காவல்துறையினரால் கைது செய்யப்பட்டுள்ளார்.
ரவிந்தர்சிங் மேற்கு வங்க கேடரில் இருந்து பதவி ஏற்று உள்நாட்டு பாதுகாப்பு இயக்குநர் பதவிக்கு வந்தார். உள்துறை தொடர்பான முக்கியத்துவம் வாய்ந்த விபரங்களை வெளி நபர்களுக்கு தெரிவித்தார் என்று ரவிந்தர்சிங் மீது உள்துறை செயலாளர் ஜி.கே.பிள்ளை குற்றம் சாட்டினார்.
இந்தியாவிலுள்ள வணிக நிறுவனங்களுக்கு முக்கியமான விபரங்களை விற்ற ரவிந்தர்சிங் நடவடிக்கைகளை கடந்த ஒரு மாத காலமாக கவனிக்கப்பட்டுவந்தது. இதன்பின்னரே அவரின் வீடு மற்றும் அலுவலகத்தின் சோதனை செய்யப்பட்டது. சோதனைக்குப்பின் டெல்லி சிறப்புக்காவல் பிரிவு அவரை கைது செய்துள்ளது. ஐஏஎஸ் அதிகாரி ஒருவர் உள்துறை பாதுகாப்பு ரகசியங்களை விற்றுள்ளது பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.
No comments:
Post a Comment