அரபுலகில் அமெரிக்காவின் சிம்மசொப்பனமாக திகழ்ந்த ஸதாம் ஹுஸைன் அவர்களை வீழ்த்தும் நோக்கில், அந்நாட்டில் பேரழிவு ஆயுதங்கள் பதுக்கி வைக்கப்பட்டுள்ளது என்ற கோயபல்ஸ் பிரச்சாரத்தை செய்து, இராக் மீது போர் தொடுத்து அந்நாட்டை சின்னாபின்னமாக்கி, சதாம் தூக்கிலிடப்படுவதற்கும் காரணமாக இருந்தவர் உலகரவுடியும், முன்னாள் அமெரிக்க அதிபருமான புஷ் என்பதை யாரும் மறந்திருக்க முடியாது.
எட்டு ஆண்டுகள் அதிபராக இருந்து அமெரிக்காவை பொருளாதரத்தில் பின்னுக்கு தள்ளியதோடு, தனது தவறான வெளியுறவுக் கொள்கையினால் தொடர்ந்து அமெரிக்காவுக்கு அச்சுறுத்தலை ஏற்படுத்தி தந்துவிட்டு ஒய்வு பெற்றுள்ள புஷ், 'டெசிஷன் பாய்ண்ட்ஸ்' என்ற பெயரில் தன் சுயசரிதையை எழுதி இருக்கிறாராம். இது அடுத்த வாரம் வெளியாக இருக்கிறது. இந்த புத்தகத்தில் ஈராக் போர் குறித்தும் எழுதி இருக்கிறார். பேரழிவு ஆயுதங்களை தேடி ஈராக் மீது போர் தொடுத்தது தான் செய்த தவறு என்று அவர் குறிப்பிட்டு இருக்கிறார்.பேரழிவு ஆயுதங்கள் ஈராக்கில் இல்லாமல் போனதும் நாம் தவறு செய்து விட்டோம் என்று நான் உணர்ந்தேன். ராணுவ வீரர்களின் எண்ணிக்கையை மிக விரைவில் குறைத்ததும் நான் செய்த தவறு என்று அவர் ஒப்புக்கொண்டுள்ளாராம்.
'பேரழிவு ஆயுதங்கள் என்னிடத்தில் எதுவுமில்லை; குவைத்தை என்னிடமிருந்து மீட்கும் போர் நடத்திய அமெரிக்க நேசநாட்டுப் படைகள் நடத்திய தாக்குதலாலும், அமெரிக்கா விதித்த பொருளாதார தடையாலும் இராக் மிகுந்த சிரமத்தில் உள்ளது. ஐ.நா பிரதிநிதிகள எங்கள் நாட்டில் வந்து, பேரழிவு ஆயுதங்கள் உள்ளதா என சோதித்துக் கொள்ளட்டும் என்றெல்லாம் சதாம் சொன்னதை மறைத்து, இராக் மீது மீண்டும் போர் தொடுத்த புஷ், இராக் அப்பாவி மக்களின் ரத்தம் குடித்த புஷ், இன்றைக்கும் இராக் மக்கள் துன்பத்தை அனுபவிக்க காரணமான புஷ், இப்போது நான் இராக் மீது போர் தொடுத்தது தவறு என்று ஒப்புக்கொள்வதால், அப்பாவி மக்களின் உயிரை மீட்டுத்தந்துவிடுமா? இராக் மீது வீசப்பட்ட குண்டுகளால் ஊனமுற்ற குழந்தைகளாக பிறக்கும் குழந்தைகளின் அவலத்தை புஷ்ஷின் வார்த்தை மாற்றிவிடுமா?
ஆனாலும் புஷ் தனது சுயசரிதையில் 'இராக் மீது போர் தொடுத்தது தவறு' என ஒப்புக்கொண்டுள்ள படியால் இதையே புஷ்ஷின் வாக்குமூலமாக கருதி அவர் போர் குற்றவாளியாக அறிவிக்கப்பட்டு, சர்வதேச நீதிமன்றத்தின் முன் நிறுத்தப்பட்டு கடுமையான தண்டனை வழங்கப்பட வேண்டும். அது மரணதண்டனையாக இருந்தால் கூட, புஷ் செய்த பாவத்துடன் ஒப்பிடுகையில் அதுவும் சிறிய தண்டனையே.
உலக நாடுகள் , குறிப்பாக முஸ்லிம் நாடுகள் ஐ.நா.விடம் இக்கோரிக்கையை முன் வைக்க வேண்டும் செய்வார்களா?
நன்றி: www.intjonline.org
No comments:
Post a Comment