அமெரிக்க நாட்டின் ஒக்லஹோமா மாநில அரசு நீதிமன்றங்களில் தீர்ப்பளிக்கும் போது இஸ்லாமிய ஷரீஅத் சட்டங்கள் மற்றும் இன்டர்நேஷனல் லா என்று சொல்லப்படும் உலக நியதிகள் கவனத்தில் கொள்ளப்படுவதை தடை செய்துள்ளது.
கடந்த செவ்வாய் கிழமை நடந்த இதற்கான வாக்கெடுப்பில் 70 சதவிகிதம் பேர் இதற்கு ஆதரவு தெரிவித்துள்ளார். ஒக்லஹோமா மாநில அரசின் அதிகாரப்பூர்வ தலைமைசெயலக இணையதளம் இந்த செய்தியை வெளியிட்டுள்ளது.அம்மாநில இஸ்லாமிய அமைப்புகள் இதற்கு கடும் எதிர்ப்பு தெரிவித்துள்ளனர்.மேலும் இந்த சட்டத்திற்கு எதிராக நீதிமன்றத்தில் வழக்கு தொடரப்பட்டுள்ளது.
அமெரிக்க அதிபர் ஒபாமா இதற்கு எந்த எதிர்ப்பும் தெரிவிக்கவில்லை. இது பற்றி எந்த கருத்தும் தெரிவித்தாக தெரியவில்லை.குற்றவாளிகளுக்கு தங்களுக்கு தண்டனை அளிப்பது பிடிக்காது. திருடர்களிடம் போய், குற்றங்களுக்கான தண்டனை விசியத்தில் வாக்கெடுத்தால் தண்டனை வேண்டாம் என்றோ அல்லது லேசான தண்டனை போதும் என்றோ தான் அதிகம் பேர் வாக்கிளிப்பார்கள்.
அது போல் குற்றங்களின் பிறப்பிடமாக திகழும் அமெரிக்கா போன்ற நாடுகளில் இவ்வாறு சட்டம் போடப்பட்டிருப்பது ஒன்றும் ஆச்சரியப்படும் விஷயமல்ல! குற்றவாளிகளுக்கு சரியான தண்டனைகள் கசக்கதான் செய்யும்.. என்றாலும் அமெரிக்க நாட்டின் ஒக்லஹோமா மாநில அரசின் இது போன்ற முஸ்லிம் விரோத போக்கும் இதற்கு எதிர்ப்பு தெரிவிக்காத ஒபாமாவின் செயலும் வண்மைகாக கண்டிக்கப்பட வேண்டும்.
நன்றி: www.tntj.net
No comments:
Post a Comment