Latest News

  

இடஒதுக்கீட்டில் திமுக அரசு துரோகம்-? காவல்துறை பணி நியமனத்தில் முஸ்லிம்களுக்கு வஞ்சகம்!

பத்தாயிரத்துஅறுபது  பணி இடங்களில் 1095 காவல்துறை உதவி ஆய்வாளர் களும் காவலர்கள் 8944 பேரும்  சிறை காவலர்கள் பணிக்கு 486 பேரும்   தீயணைப்பு படை வீரர்கள் பணிக்கு 630 பேரும் பணியில் சேரவிருக்கும் நிலையில் வழக்கம் போல் முஸ்லிம்களுக்கு இட ஒதுக்கீடு முறையில் துரோகம் இழைக் கப்பட்டதாக தகவல்கள் வெளி வந்ததை யடுத்து சமுதாய ஆர்வலர்கள் கொந்தளிக் கின்றனர்.2069 பணியிடம் ஆதி திராவிட சமூகத்தினருக்கும் 3343 பணியிடங்கள் பிற்படுத்தப்பட்ட சமூகத்தினருக்கும் பெண்கள் 2673 பேரும்தேர்வு செய்யப்பட்டனர்.
அந்தந்த சமூக மக்களுக்கு வழங்கப்பட்ட இட ஒதுக்கீட்டின்படி அவர்களுக்கு பணி இடங்கள் கிட்டத்தட்ட வழங்கப்பட்டு  உள்ளன. உதாரணமாக அருந்ததியர் சமூக மக்களுக்கான பணியிடத்துக்கு 293 பேர் தேர்வாகியுள்ளனர்.முஸ்லிம்  சமூகத்துக்கு வழங்கப்பட்டுள்ள 3.5 சதவீதத்திற்கு வழங்கப்பட்டுள்ள பணியிடங்கள் எவ்வளவு தெரியுமா 263 தான்.
மூன்றரை சதவீதம் இட ஒதுக்கீட்டுக்கு 350 பணியிடங்களுக்கு குறையாமல் அல்லவா இருக்கவேண்டும். கவனக்குறைவால் விளைந்த தவறாக இதனைக் கருதிவிட முடியாதுகணக்கில் பிழை செய்திருக்கிறார்கள்நாளை தேர்தலின் போது முஸ்லிம்கள் சரியான கணக்கு எது என நிரூபித்துக் காட்டுவார்கள்.
தவறை உடனடியாக சரி செய்து தமிழக அரசு அவப்பெயரில் இருந்து தப்புமா? நடவடிக்கை இருக்குமா?    

நன்றி: www.tmmk.in

No comments:

Post a Comment

TIYA

WEBSITE DESIGNED BY: NOORUL IBN JAHABER ALI WEBSITE CONTROLLED BY: DOT COLORS
sourceTemplateism Copyright © 2015

Theme images by Bim. Powered by Blogger.