பலஸ்தீன் சிறுவர்கள் மீதான அத்துமீறல்கள் -தொடரும் இஸ்ரேலிய அராஜகம்
கடந்த ஞாயிற்றுக்கிழமை (14.11.2010) காஸாவின் கிழக்குப் பிராந்திய எல்லையில் சரளைக்கல் சேகரிக்கும் பணியில் ஈடுபட்டிருந்த 13 வயதான பலஸ்தீன் சிறுவனை இஸ்ரேலிய ஆக்கிரமிப்புப் படை துப்பாக்கியால் சுட்டதில், அச்சிறுவன் படுகாயமுற்று மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ளான். காஸா மீது சர்வதேச மனித உரிமைச் சட்டங்களுக்குப் புறம்பாக இஸ்ரேல் கடைப்பிடித்துவரும் முற்றுகையால் அன்றாட வாழ்க்கை சீர்குலைந்த நிலையிலே தத்தமது குடும்பப் பராமரிப்பின் பொருட்டு பல சிறுவர்கள் சரளைக்கல் பொறுக்குதல் முதலான கூலித் தொழில்களில் ஈடுபட்டு வருகின்றமை குறிப்பிடத்தக்கது.
2009 ஆம் ஆண்டிலிருந்து பலஸ்தீன் கூலித் தொழிலாளர் மீதான மனிதாபிமானமற்ற இஸ்ரேலியத் தாக்குதல் நடவடிக்கைகளால் இப்பிரதேசத்தில் இதுவரை 67 பேர் படுகாயமடைந்துள்ளனர் என காஸா மருத்துவசேவை ஒருங்கிணைப்பாளர் ஆதம் அபூ சல்மியா தெரிவித்துள்ளார்.
இதேவேளை, அல் கலீல் நகர இப்றாஹீமி மஸ்ஜிதை நோக்கிச் சென்று கொண்டிருந்த 15 வயது சிறுமி ஹதீல் அபூ துர்கி இஸ்ரேலிய ஆக்கிரமிப்புப் படையினரால் கடத்திச் செல்லப்பட்டுள்ளதாகவும், அச்சிறுமியைப் பற்றி இதுவரை எந்தத் தகவலும் கிடைக்கப் பெறவில்லை என்றும் உள்ளூர் வட்டாரங்கள் தகவல் தெரிவித்துள்ளன.
No comments:
Post a Comment