2006ஆம் ஆண்டு மார்ச் மாதம் 31ஆம் தேதி நிலவரப்படி நாடு முழுவதும் 8 கோடி 96 லட்சத்து 18 ஆயிரம் வாகனங்கள் பதிவு செய்யப்பட்டுள்ளன. இவற்றுள் அதிகபட்சமாக மகாராஷ்டிராவில் ஒரு கோடியே 9 லட்சத்து 66 ஆயிரம் வாகனங்களும், அதற்கு அடுத்தபடியாக தமிழ்நாட்டில் ஒரு கோடியே 54 ஆயிரம் வாகனங்களும் உள்ளன.
தொழில் வளம் மிகுந்த குஜராத்தில் 86 லட்சத்து 22 ஆயிரம் வாகனங்களும், பெரிய மாநிலமான உத்தரப் பிரதேசத்தில் 79 லட்சத்து 89 ஆயிரம் வாகனங்களும், ஆந்திராவில் 72 லட்சத்து 18 ஆயிரம் வாகனங்களும் இருப்பதாக புள்ளி விவரங்கள் கூறுகின்றன. லட்சத்தீவில் 6000 பதிவு பெற்ற வாகனங்கள் மட்டுமே உள்ளன.
No comments:
Post a Comment