பணம் வேண்டுமா ? சிறுநீர் கழியுங்கள். சினிமா பட டயலாக் அல்ல. தென் ஆப்பிரிக்காவில் உள்ள டர்பன் நகரில் தான் இத்திட்டம் கொண்டு வரப்பட்டுள்ளது. தண்ணீர் பயன்படுத்தாத கழிவறைகளை பயன்படுத்துவதை ஊக்குவிக்க டர்பன் நகராட்சி இத்திட்டத்தை கொண்டு வரவுள்ளது.
சுகாதாரத்தை மேம்படுத்தவும் பணத்தைச் சிக்கனப்படுத்தவும் டர்பனில் உள்ள 90,000 வீடுகளில் இவ்வகையான தண்ணீர் தேவைப்படா கழிவறைகளைப் பொருத்த திட்டமிடப்பட்டுள்ளது. ஒவ்வொரு கழிவறையிலும் 20 லிட்டர் டேங்கை பொருத்திச் சிறுநீரை சேகரிக்க திட்டமிடப்பட்டுள்ளது.
நைட்ரேட்ஸ், பொட்டாஸியம், பாஸ்பரஸ் போன்ற வேதிப் பொருட்கள் அடங்கியுள்ளதால் சேகரிக்கப்படும் சிறுநீரை பயன்படுத்தி உரம் தயாரிக்க திட்டமிடப்பட்டுள்ளது. வாரம் தோறும் நகராட்சி ஊழியர் ஒவ்வோர் வீடாக சென்று டேங்கில் உள்ள சிறுநீரை சேகரித்து கொண்டு சுமார் 200 ரூபாய் (4 டாலர்) தருவார். 43 சதவிகித மக்கள் ஒரு நாளைக்கு 2 டாலருக்குக் குறைவாக சம்பாதிக்கும் நாட்டில் இத்தொகை அற்பமானதல்ல.
கழிவறைகளைப் பயன்படுத்துவதைத் துர்சகுனமாக கருதும் நாட்டில் அக்கழிவறைகளையே பணம் சம்பாதிக்க உதவும் இயந்திரங்களாக மாற்றினால் தான் கழிவறைகளைப் பயன்படுத்துவார்கள் என்பதும் இத்திட்டத்தை அறிமுகப்படுத்த காரணம் என்றும் நகராட்சி அதிகாரிகள் தெரிவித்தனர்.
No comments:
Post a Comment