அக்டோபர் 29ஆம் தேதி ஹாங்காங்கில் இருந்து புறப்பட்டு வான்கூவர் சென்ற விமானத்தில் அவர் பயணம் செய்துள்ளார். முதியவர் போன்று தோற்றம் அளிப்பதற்காக அந்த இளைஞர் சிலிகான் முகமூடியை உபயோகித்துள்ளார்.
ஹாங்காங் விமான நிலையத்தில் காகாசியன் இனத்தைச் சேர்ந்த முதியவரைப் போன்ற முகத்துடன் இளைஞரின் கைகளுடன் இவரைச் சிலர் பார்த்துள்ளனர். விமானத்தில் கழிவறைக்குச் செல்லும்போது, இருபதுகளின் தொடக்கத்தில் உள்ள இவரைப் பார்த்த சிலர் குடியேற்ற அதிகாரிகளுக்குத் தகவல் சொல்லியிருக்கக் கூடும்.
நம்புவதற்கு கடினமான வகையில் மிகவும் நூதனமான முறையில் ஏமாற்ற முயன்றவர் குடியேற்ற அதிகாரிகளிடம் சிக்கிக் கொண்டார்.
தான் புறப்படும் போது சிலிக்கான் மாஸ்க்கை உபயோகித்து விமானத்தில் ஏறியதாகவும் பின்னர் அதனைக் கழற்றிவிட்டதாகவும் அந்த இளைஞர் ஒப்புக் கொண்டுள்ளார். இவரது பையைச் சோதனையிட்டபோது, முதியவரைப் போன்று தோற்றம் தரும் சிலிகான் மாஸ்க், தோளினால் ஆன தொப்பி மற்றும் கண்ணாடிகள் ஆகியவை கைப்பற்றப்பட்டுள்ளன.
No comments:
Post a Comment