பிஸ்மில்லாஹிர் ரஹ்மானிர்ரஹீம்
அன்பிற்கினிய தாஜுல் இஸ்லாம் இளைஞர் சங்க (TIYA) உறுப்பினர்கள் மற்றும் TIYA இணைய தள வாசகர்களுக்கு அஸ்ஸலாமு அலைக்கும் வரஹ்மத்துல்லாஹி வபரகாத்துஹு.
வல்ல நாயன் அல்லாஹ்வின் பெரும் கிருபையால் நமது முஹல்லாவின் தாஜுல் இஸ்லாம் சங்கத்தில் கடந்த 29.09.2010 அன்று முதல் நமது TIYA சார்பாக "பெண்கள் தையற் பயிற்சி" வகுப்பு 2 தையல் இயந்திரங்களுடன் தொடங்கப்பட்டுள்ளது. நமது முஹல்லா பெண்கள் மத்தியில் நல்ல வரவேற்பு இருப்பதனாலும் துவங்கிய சில தினங்களிலேயே 20க்கும் மேற்பட்ட பெண்கள் ஆர்வத்துடன் தையற் பயிற்சி வகுப்பில் சேர்ந்துள்ளதாலும், மேலும் பல பெண்கள் சேர வாய்ப்புள்ளதாலும், TIYA நிர்வாகம் மேலும் 3 தையல் இயந்திரங்கள் அளிப்பது என தீர்மானித்துள்ளது. இத்தகவலை அறியும் அன்பர்கள் தாங்கள் மற்றும் தாங்களறிந்த பெண்களை இதில் சேர்ந்து பயன்பெற கேட்டுக் கொள்ளுங்கள்.
இப்பயிற்சி வகுப்பில் சேரும் ஒவ்வொரு பெண்களிடமிருந்தும் மாதந்தோறும் ரூ. 100/- மட்டும் இப்பயிற்சி மைய வளர்ச்சி நிதியாக பெறப்படுகிறது என்பதையும் தெரிவித்துக் கொள்கிறோம்.
இவண்,
நிர்வாகம்
TIYA - அமீரகம்
No comments:
Post a Comment