Latest News

தமிழறிந்த ஆலிம்களுக்கு ஓர் அரிய வாய்ப்பு …!

இஸ்லாமிய நூல்கள் படிக்க ஆர்வம் இருந்தும் அவற்றைப் பெறுவது கடினமாக உள்ள சூழ்நிலையில், ஊரில் நூலகமும் இல்லையே என்று ஏங்கும் ஆலிம் பெருமக்களுக்கு ஓர் அரிய வாய்ப்பு ……!

ஆலிம் பெருமக்களின் இல்லம் தேடி அஞ்சல் வழியில் இஸ்லாமிய நூல்களை இலவசமாக அனுப்புவதற்கான ஏற்பாடுகளை இஸ்லாமிக் அகாடமி செய்துள்ளது.

ரமளான் மாதம் முதல் இந்தத் திட்டம் செயல்படத் தொடங்கியுள்ளது. அஞ்சல் வழி நூலகத்தில் உறுப்பினராகச் சேர ஆர்வமுள்ள ஆலிம்கள் உடனே தங்களின் பெயர்களைப் பதிவு கொள்ளவும்.

உறுப்பினர் கட்டணம் எதுவும் இல்லை. அஞ்சல் செலவும் வாய் இல்லை.
அனைத்தையும் அகாடமியே ஏற்றுக் கொள்ளும். இந்த அரிய வாய்ப்பை நன்கு பயன்படுத்திக் கொள்ள ஆலிம் பெருமக்களை அன்புடன் அழைக்கிறோம்.

முகவரி :

உலமா அஞ்சல் வழி நூலகம்
இஸ்லாமிக் அகாடமி
ஐ.எஃப்.டி. காம்ப்ளக்ஸ்
எண் 138, பெரம்பூர் நெடுஞ்சாலை
சென்னை – 600 012
தொலைபேசி : 2662 1101
மின்னஞ்சல் :
postallibrary@gmail.com

No comments:

Post a Comment

TIYA

WEBSITE DESIGNED BY: NOORUL IBN JAHABER ALI WEBSITE CONTROLLED BY: DOT COLORS
sourceNOORUL IBN JAHABER ALI Copyright © 2015

Theme images by Bim. Powered by Blogger.