Latest News

வினாடி-வினா போட்டி

திருச்செந்தூர் டாக்டர் சிவந்தி ஆதித்தனார் பொறியியல் கல்லூரியில் பள்ளி மாணவ-மாணவிகளுக்கான மாநில அளவிலான வினாடி-வினா போட்டி அடுத்த மாதம் 12-ந் தேதி நடக்கிறது.

சுழற்கோப்பை

ஒவ்வொரு ஆண்டும் திருச்செந்தூர் டாக்டர் சிவந்தி ஆதித்தனார் பொறியியல் கல்லூரியின் பயின்றோர் கழகம் இப்போட்டியை நடத்தி வருகிறது.

பள்ளி மாணவ, மாணவிகளுக்கிடையே பொது அறிவு மற்றும் தொழில்நுட்ப அறிவை மேம்படுத்துவதற்காக இப்போட்டி நடத்தப்படுகிறது. மாநில அளவில் முதலிடம் பிடிக்கும் பள்ளிக்கு பெருமதிப்புடைய சிவந்தி சுழற்கோப்பையும், ரூ.3,500 ரொக்கப்பரிசும் வழங்கப்படும். இரண்டாவது, மூன்றாவது இடங்களை பெறும் அணிகளுக்கு தலா ரூ.3,000 மற்றும் ரூ.2,750 வழங்கப்படும்.

சான்றிதழ்

தமிழகத்திலுள்ள பள்ளிகளில் பத்து, பதினொன்று மற்றும் பனிரெண்டாம் வகுப்புகளில் பயிலும் மாணவ, மாணவிகள் இந்த போட்டியில் பங்கேற்கலாம். ஒவ்வொரு பள்ளியும் இரு மாணவர் அல்லது மாணவிகளை போட்டிக்கு அனுப்பலாம்.

போட்டியில் கலந்து கொள்ள பதிவு கட்டணம் எதுவும் கிடையாது. போட்டியில் கலந்துகொள்பவர்கள் தலைமை ஆசிரியரிடம் அத்தாட்சி சான்றிதழ் பெற்று வர வேண்டும். தகுதி சுற்றில் உள்ள அணிகளை தேர்ந்தெடுக்க நவம்பர் 12-ந் தேதி அன்று காலை எழுத்து தேர்வும், அதன் பின்பு ஆறு அணிகளை தேர்ந்தெடுக்க தகுதி சுற்றும், மாலை இறுதி சுற்றும் நடைபெறும்.

கேள்விகள்

வினாடி-வினா கேள்விகள், அடிப்படை அறிவியல், நாட்டு நடப்பு, அடிப்படை கணிதம் மற்றும் பொது அறிவு ஆகியவற்றில் இருந்து கேட்கப்படும். முதல் மூன்று இடங்களை பிடிக்கும் அணியினருக்கு போக்குவரத்து செலவு அளிக்கப்படும்.

வெற்றி பெற்ற அணிகளுக்கு சுழற்கோப்பையையும், ரொக்கப்பரிசுகளையும் டாக்டர் சிவந்தி ஆதித்தனார் பொறியியல் கல்லூரியின் நிறுவனர், தலைவர் பத்மஸ்ரீ டாக்டர் சிவந்தி ஆதித்தனார் அவர்கள் கல்லூரி நாள் விழாவின் போது வழங்குவார்கள்.

தொடர்பு முகவரி

இப்போட்டியில் பங்குபெறும் மாணவ மாணவிகள் தங்களது பெயர், படிக்கும் வகுப்பு, பள்ளியின் பெயர், தொடர்பு கொள்ள வேண்டிய முகவரி (தொலைபேசி எண்ணுடன்) ஆகிய விவரங்களை எழுதி தலைமை ஆசிரியர் கையொப்பத்துடன் முதல்வர், டாக்டர் சிவந்தி ஆதித்தனார் பொறியியல் கல்லூரி திருச்செந்தூர் 628 215 தூத்துக்குடி மாவட்டம் என்ற முகவரிக்கு அனுப்ப வேண்டும்.

இதுகுறித்து மேலும் விவரங்களை அறிய 04639-242482, 245854 என்ற தொலைபேசி எண்ணுக்கு தொடர்பு கொள்ளலாம் என கல்லூரி முதல்வர் டாக்டர் ஜெ.மகேஸ்வரன் தெரிவித்துள்ளார்.

No comments:

Post a Comment

TIYA

WEBSITE DESIGNED BY: NOORUL IBN JAHABER ALI WEBSITE CONTROLLED BY: DOT COLORS
sourceNOORUL IBN JAHABER ALI Copyright © 2015

Theme images by Bim. Powered by Blogger.