மேற்கு வங்க மாநிலத் தேர்தலில் பல முக்கியத் தொகுதிகளில் குறிப்பாக கொல்கத்தாவில் உள்ள பெரும்பாலான தொகுதிகளில் வெற்றி தோல்வியை தீர்மானிக்கும் சக்தியாக முஸ்லிம்கள் திகழ்கின்றனர். மேற்கு வங்கத்தின் மொத்த மக்கள் தொகையில் முஸ்லிம்கள் எண்ணிக்கை 26 சதவிகிதமாகும்.
கடந்த நாடாளுன்றத் தேர்தலில் மத்தா பானர்ஜியின் திரிணாமுல் காங்கிரஸ் கட்சிக்கு அதிக வாக்குகள் கிடைத்தது, முஸ்லிம்கள் பெருவாரியாக மம்தாவை ஆதரித்தும், கம்யூனிஸ்டு கட்சியை எதிர்த்தும் வாக்களித்திருந்தார்கள்.
இந்த தேர்தலுக்குப் பிறகுதான் முஸ்லிம்களுக்கான பிரச்னைகளின் பக்கம் கவனம் செலுத்தத் துவங் கியது புத்ததேவ் பட்டாச்சார்யாவின் மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சி.
இந்த தேர்தலுக்குப் பிறகுதான் முஸ்லிம்களுக்கான பிரச்னைகளின் பக்கம் கவனம் செலுத்தத் துவங் கியது புத்ததேவ் பட்டாச்சார்யாவின் மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சி.
நீதிபதி ராஜேந்திர சச்சார் கமிட்டி அறிக்கையின் அடிப்படையில் மேற்கு வங்க முஸ்லிம்களுக்கு இடஒதுக்கீடு வழங்குவோம் என வாக்குறுதி அளித்த கம்யூனிஸ்ட் கட்சி, மற்ற கட்சிகளைப் போல அதனை வெறும் ஏமாற்று அறிவிப்பாக ஆக்காமல் சொன்னபடியே அரசு வேலை வாய்ப்புகளில் 10 சதவிகித இடஒதுக்கீட்டை அளித்துள்ளது.
ஏற்கனவே இம்மாநிலத்தில் முஸ்லிம்கள் பிற்படுத்தப்பட்டோர் பட்டியலில் இருப்பதால் பிற்படுத்தப்பட்டோர் இடஒதுக்கீட்டின் அடிப்படையில் ஏழு சதவிகித ஒதுக்கீடு அளிக்கப்பட்டு வந்தது. இந்நிலையில், மேற்கு வங்க முஸ்லிம்களுக்கு கூடுதல் இடஒதுக்கீடு வழங்க முடிவு செய்த புத்ததேவ் அரசு, இதற்கென முஸ்லிம்களில் ஒரு பிரிவினருக்காக மிகவும் பிற்படுத்தப்பட்ட பிரிவு ஒன்றை ஏற்படுத்தி அதன்படி 10 சதவிகித கூடுதல் இடஒதுக்கீட்டை அளித்து மொத்த இடஒதுக்கீட்டின் அளவை 17 சதவிகிதமாக உயர்த்தியுள்ளது.முதல்வர் புத்ததேவின் அறிவிப்பு மேற்கு வங்க முஸ்லிம்களிடத்தில் மகிழ்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.
முன்னதாக மேற்கு வங்க முஸ்லிம்களின் ஹஜ் பயணத் தேவைகளுக்காக ஹஜ் டவர் கட்ட இடம் ஒதுக்கித்தந்த புத்ததேவ் அரசு, அதனை பிரம்மாண்டமாகவும் கட்டி முடித்து அம்மாநில முஸ்லிம்களுக்கு அர்ப்பணித்துள்ளது குறிப்பிடத்தக்கதாகும்.
புத்ததேவ் அரசின் இந்த இட ஒதுக்கீடு நடவடிக்கையை எதிர்க்க முடியாமல் குமுறும் எதிர்க்கட்சிகள், மாநிலத்தில் கம்யூனிஸ்டுகளின் பிடிதளர்ந்து வருகிறது. அடுத்த ஆண்டு சட்டசபைக்கான தேர்தல் வேறு நடைபெறவுள்ளது.
ஆகவே சிறுபான்மை மக்களின் ஓட்டுக்களை கருத்தில் கொண்டு இந்த இட ஒதுக்கீட்டு உயர்வு அறிவிக்கப்பட்டி ருப்பதாக விமர்சனம் செய்து வரு கின்றன. ஆனால் புத்ததேவ் அரசு சமூக நீதியை காப்பாற்றி இருக்கிறது என்கின்றனர் சமூக ஆர்வலர்கள்
No comments:
Post a Comment