அஸ்ஸலாமு அலைக்கும்,
சுட்டுப் பார்க்க நாங்கள்
குருவிகளாய்;
தோட்டாக்களுக்கு நாங்கள்
கருவிகளாய்!
கொன்று விட்டு
வென்றதாய் சொல்கிறாய்;
பிதைத்து விட்டு
பதக்கம் கேட்கிறாய்!
பேட்டிக் கொடுக்க
வாட்டி எடுக்கிறாய்;
எங்களை ஒழித்துக்கட்டி
ஒளிந்துக்கொண்டேன் என்கிறாய்!
ஓடவிட்டு சுட்டுத்
தள்ளுகிறாய்;
சுட்டப்பின்னே ஓடினேன்
என்கிறாய்!
வாய்மூடி ஜனநாயகம்
வாய் பார்க்க;
வாயைக்கட்டி எங்களை
உண்மையைக் கக்கு என்கிறாய்!
வாக்கெடுக்க உரிமையுண்டு
ஒட்டுப்போடு என்கிறாய்;
சுட்டப்பின்ன பாகிஸ்தான்
தீவிரவாதி என்கிறாய்!
No comments:
Post a Comment