அஸ்ஸலாமு அலைக்கும்
தடுத்திடத் துடித்து
எடுத்திட நினைத்து
பழிப்போட்டாய்
பயங்கரவாதி என்று!
வெள்ளை மாளிகையில்
முகாமிட்டு எங்களுக்கு
முத்திரையிட்டாய்
முஸ்லிம்கள்
முகத்திரையிட்டால்!
அழித்திட அதற்க்கு நீ
விழித்திட;
வெட்ட நினைத்த
கோடரி உன் கரத்திலிருக்க;
வெட்கப்பட்டு மொட்டுவிட்டு
மார்க்கம் கண்டது உன்
மச்சினி என்றது!
களைய நினைத்தாய்
விளைய வைத்தான்;
ஒடுக்க நினைத்தாய்
மினுக்கிட வைத்தான்!
புதைக்க நினைத்த இடத்திலே
விதைக்க வைப்பான்!
இணையில்லை என்றும்
இறைவனுக்கு;
எவனுமில்லை அவனை
எதிர்ப்பதற்கு!
No comments:
Post a Comment