
தர்மபுரி: ஆன்லைன் விளையாட்டில் ஆபாசமாக பேசிய புகாரில், யூடியூபர்
பப்ஜி மதன் தலைமறைவாகிய நிலையில், தர்மபுரியில் கைது செய்யப்பட்டார்.'யு
டியூப்' சேனல் நடத்தி வரும் மதன் என்பவர், தடை செய்யப்பட்ட 'பப்ஜி'
விளையாட்டுகளின் வாயிலாக, சிறுவர்களை தவறான பாதைக்கு திசை
திருப்புவதாகவும், பெண்களிடம் ஆபாசமாக பேசுவதாகவும் புகார் எழுந்தது. பப்ஜி
விளையாட்டை ஆன்லைனில் நேரலையாக ஒளிபரப்பி, சிறுவர், சிறுமிகளை ஆபாச
வார்த்தைகளால் திட்டியுள்ளார். கோடிக் கணக்கான பணமும், ரசிகர்களும்
இருப்பதால் எதிர்ப்பவர்களை குடும்பத்துடன் காணாமல் போக செய்து விடுவேன்
என்றும், யூடியூபர் பப்ஜி மதன் மிரட்டுவது போன்ற வீடியோ வெளியாகி
வைரலானது.இது தொடர்பாக சமூக ஆர்வலர்கள் அளித்த புகாரின்படி போலீசார்
விசாரணை நடத்தி வருகின்றனர்.
தவிர, மத்திய குற்றப்பிரிவு சைபர் கிரைமில் மட்டும்
இதுவரைக்கும், 120க்கும் மேற்பட்ட புகார்கள் வந்துள்ளதாகக் கூறப்படுகிறது.
துணை ஆணையர் ராஜேஷ் கண்ணா தலைமையிலான தனிப்படை போலீசார், மதனை தீவிரமாக
தேடி வந்தனர். இதற்கிடையே அவரது மனைவி கிருத்திகா அந்த யூடியூப் சேனலுக்கு
அட்மினாக இருந்தது மட்டுமல்லாமல், மதனுடன் சேர்ந்து வேறு பெயரில் ஆபாச
உரையாடல் நடத்தியுள்ளது தெரியவந்தது. இதனையடுத்து, கிருத்திகாவை போலீசார்
கைது செய்தனர்.தலைமறைவாக இருந்த மதன் குறித்து கிருத்திகாவிடம் போலீசார்
தீவிர விசாரணை மேற்கொண்டனர். இந்நிலையில், தர்மபுரியில் பதுங்கி இருந்த மதன
போலீசார் சுற்றி வளைத்து கைது செய்தனர். அவர் விரைவில் கோர்ட்டில் ஆஜர்
படுத்தப்படுவார் என எதிர்பார்க்கப்படுகிறது. இதற்கிடையே சென்னை
உயர்நீதிமன்றத்தில் முன்ஜாமின் கோரி மதன் தாக்கல் செய்த மனுவை நீதிபதிகள்
நிராகரித்தனர்.
No comments:
Post a Comment