
ரயில் டிக்கெட்டை கேன்சல் செய்யும் போது அல்லது காத்திருப்பு பட்டியலில் இருந்தால் இனி பணம் உடனடியாக கிடைக்க ரயில்வே நிர்வாகம் சார்பில் ஏற்பாடு செய்யப்பட்டுள்ளது.
ஆன்லைனில் ரயில் டிக்கெட் புக் செய்யும் போது சில நேரங்களில் பணம் கணக்கில் எடுத்துக் கொண்டு டிக்கெட் புக் ஆகாமல் போக வாய்ப்பு உள்ளது. எடுக்கப்பட்ட பணம் மீண்டும் வங்கி கணக்கிற்கு வர ஒரு வாரம் வரை ஆகும்.
அதே போல் நாம் புக் செய்ய டிக்கெட்டை கேன்சல் செய்தாலும் பணம் கிடைக்க ஒரு வாரம் ஆகும். அதே போல் வெயிட்டிங் லிஸ்ட் டிக்கெட் அதே நிலையில் இருந்தாலும் தானாக டிக்கெட் கேன்சல் ஆகிவிட்டதாக கருதப்படும். பணம் கிடைக்க ஒரு வாரம் ஆகும்.

ஆனால் இந்த தாமதம் முடிவுக்கு வந்துள்ளதாக ரயில்வே நிர்வாகம் தெரிவித்துள்ளது. இதற்காக IRCTC தனியாக ஒரு பேமெண்ட் கேட்வே உருவாக்கியுள்ளது. இதன்மூலம் பரிவர்த்தனைகள் மிக வேகமாக நடைபெறும்.
இதற்கு முன் தனியாக பேமண்ட் கேட்வே வசதி இல்லை. அதனால் மூன்றாம் தரப்பு மூலமாகவே பரிவர்த்தனை செய்ய வேண்டியிருந்தது. அதனால் ரீஃபண்ட் தொகையை வழங்க நிறைய நேரம் எடுத்தது. ஆனால் இப்போது இந்த வசதியால் ரீஃபண்ட் தொகை உடனடியாகக் கிடைக்கும என ரயில்வே நிர்வாகம் தெரிவித்துள்ளது.
இனி ரீஃபண்ட் தொகை நில நிமிடங்களிலேயோ அல்லது சில மணி நேரங்களிலேயே கிடைத்துவிடும் என்று கூறப்படுகிறது.
newstm.in
No comments:
Post a Comment