கொரோனா 2-வது அலையின் போது உருமாற்றம் அடைந்த, 'டெல்டா' வகை வைரஸ், மிக வேகமாக பரவியது. இந்த வைரஸ், டெல்டா பிளஸ் அல்லது ஏஒய்.01 என்ற வைரசாக மேலும் உருமாற்றம் அடைந்து, 3-வது அலையை உருவாக்கும் என ஆய்வாளர்கள் சமீபத்தில் தெரிவித்தனர்.
டெல்டா பிளஸ் வகை வைரஸ், எளிதாக பரவக்கூடியது, நுரையீரல் அணுக்களுடன் எளிதாக தாக்கக்கூடியது, தொற்று பாதித்தவருக்கு வழங்கப்படும் சிகிச்சைக்கு எதிராக செயல்படுவது, வைரஸை அழிக்கக் கூடிய எதிர்ப்பணுக்களை மீறி செயல்படும் தன்மைகளைக் கொண்டது என ஒன்றிய சுகாதார அமைச்சகம் தெரிவித்துளளது. இந்தியாவில் இதுவரை 40 பேருக்கு டெல்டா பிளஸ் வைரஸ் இருப்பது உறுதியாகியுள்ளது.
இந்நிலையில், தமிழ்நாட்டிலும் ஒருவருக்கு டெல்டா பிளஸ் கொரோனா தொற்று பாதிப்பு உறுதி செய்யப்பட்டுள்ளது. மருத்துவத்துறை செயலர் ராதாகிருஷ்ணன் இந்ததகவலை தெரிவித்துள்ளார். ஆயிரத்திற்கும் அதிகமான மாதிரிகளை பரிசோதனை செய்யப்பட்டதில் ஒருவருக்கு டெல்டா பிளஸ் வகை உள்ளது கண்டறியப்பட்டுள்ளதாக தெரிவித்துள்ளார்.
இந்தியாவில் கொரோனா 3-வது அலை தவிர்க்க முடியாது. இன்னும் 6 முதல் 8 வாரங்களில் அதை எதிர்கொள்ள நேரிடும் என டெல்லி எய்ம்ஸ் இயக்குநர் ரஞ்சித் குலேரியா கூறியிருந்த நிலையில் தற்போது டெல்டா பிளஸ் பரவல் அச்சமூட்டுவதாக அமைந்திருக்கிறது.
No comments:
Post a Comment