
12-ஆம் வகுப்பு மாணவர்களுக்கு இன்று முதல் தேர்வு விடுமுறை அளிக்கப்படுவதாக பள்ளிக் கல்வித்துறை அறிவித்துள்ளது.
12-ஆம் வகுப்பு மாணவர்களுக்கான செய்முறை பொதுத் தேர்வு நேற்று தொடங்கிய நிலையில், இன்று முதல், தேர்வு விடுமுறை அளிக்கப்படுவதாக கல்வித்துறை அறிவித்துள்ளது. செய்முறைத் தேர்வு இருப்பின், அந்த பிரிவு மாணவர்கள் மட்டும் குறிப்பிட்ட நாளில் பள்ளிக்கு வருகை புரிய வேண்டும் என்றும், இதர மாணவர்களுக்கு தேர்வு விடுமுறை தொடர்வதாகவும் கல்வித்துறை தெரிவித்துள்ளது.
கொரோனா பரவல் காரணமாக 12ஆம் வகுப்பு பொதுத் தேர்வுகள் ஒத்தி வைக்கப்படும் எனக் கூறப்பட்ட நிலையில் மாணவர்களுக்கு தேர்வு விடுமுறை அறிவிக்கப்பட்டுள்ளது குறிப்பிடத்தக்கது.
Advertisement:
No comments:
Post a Comment