Latest News

  

வாக்குச்சாவடிக்கு செல்லாமலே வாக்களிக்கும் முறை" சாத்தியமாகலாம்: தேர்தல் ஆணையம் நம்பிக்கை

புது டெல்லி: 2024 மக்களவைத் தேர்தலில் வாக்கு சாவடிக்கு செல்லாமலேயே வாக்களிக்கும் முறை செயல் படுத்தப்படலாம் என்ற நம்பிக்கையை இந்திய தேர்தல் ஆணையம் தெரிவித்துள்ளதுடன், அடுத்த இரண்டு-மூன்று மாதங்களில் இதற்காக ஒரு பைலட் திட்டம் தொடங்கப்படலாம் என்றும் தலைமைத் தேர்தல் ஆணையர் சுனில் அரோரா (Sunil Arora) கூறினார்.

ஐந்து மாநிலங்களில் சட்டமன்றத் தேர்தலுக்குப் பிறகு, வெளிநாடு வாழ் இந்தியர்கள் (NRIs) தங்கள் வசிக்கும் நாட்டிலிருந்து மின்னணு முறையில் அனுப்பப்படும் அஞ்சல் வாக்குச் சீட்டு (ETPBS) மூலம் தொலைதூரத்தில் (வெளிநாட்டில்) இருந்தபடியே வாக்களிக்கும் முறையை கொண்டுவர அனைத்து தரப்பினருடனும் தேர்தல் ஆணையம் ஆலோசனை நடத்தும்.

உங்களிடம் 2 வாக்காளர் அட்டைகள் உள்ளதா? எச்சரிக்கையாக இருங்கள்

சனிக்கிழமை நடந்த சன்சாத் ரத்னா விருதுகள் விழாவில் உரையாற்றிய தலைமைத் தேர்தல் ஆணையர் சுனில் அரோரா (Chief Election Commissioner Sunil Arora), ஐ.ஐ.டி மெட்ராஸ் (IIT Madras) மற்றும் பிற முன்னணி நிறுவனங்களைச் சேர்ந்த பிரபல தொழில்நுட்ப வல்லுநர்களுடன் கலந்தாலோசித்து, வாக்குச்சாவடிக்கு செல்லாமலே வாக்களிக்கும் முறையை செயல்படுத்துவதற்கான ஒரு ஆராய்ச்சித் திட்டத்தை இந்த ஆண்டு தொடக்கத்தில் தேர்தல் ஆணையம் தொடங்கியுள்ளது என்றார்.

வாக்குச்சாவடிக்கு செல்லாமலே வாக்களிக்கும் முறை 2024 மக்களவைத் தேர்தலுக்குள் செயல்படுத்தப்படும் என்றும் அவர் நம்பிக்கை தெரிவித்தார். இந்த திட்டத்திற்கு வடிவம் கொடுப்பதற்காக ஒரு பிரத்யேக குழு கடுமையாக உழைத்து வருகிறது என்றார்.

 

No comments:

Post a Comment

TIYA

WEBSITE DESIGNED BY: NOORUL IBN JAHABER ALI WEBSITE CONTROLLED BY: DOT COLORS
sourceTemplateism Copyright © 2015

Theme images by Bim. Powered by Blogger.