
தமிழகத்தில் கரோனா பரவல் அதிகரிப்பதால் சென்னை உயர் நீதிமன்றம், உயர் நீதிமன்ற மதுரை கிளையில் நாளை முதல் மீண்டும் காணொலி காட்சி மூலமாக விசா ரணை நடைபெறும் என்று தலைமை பதிவாளர் அறிவித்துள்ளார். வழக் கறிஞர்களின் சேம்பர்கள் கால வரையின்றி மூடப்படுவதால், அவர் கள் தங்களது பொருட்களை இன்று மாலைக்குள் எடுத்துக்கொள்ள அறிவுறுத்தப்பட்டுள்ளது.
கரோனா பரவல் காரணமாக கடந்த 2020 மார்ச் இறுதியில் சென்னை உயர் நீதிமன்றம் மூடப் பட்டது. அதன்பிறகு, காணொலி காட்சி மூலமாக வழக்கு விசா ரணை நடந்துவந்தது. 10 மாத இடை வெளிக்கு பிறகு, உயர் நீதிமன் றத்தில் நேரடி விசாரணை கடந்த பிப்ரவரி மாதம் தொடங்கியது. இருப்பினும் நீதிபதிகள், வழக் கறிஞர்களின் விருப்பத்துக்கு ஏற்ப காணொலி மற்றும் நேரடி விசாரணை நடந்து வந்தது.
அதேபோல, நீண்ட இடைவெளிக்கு பிறகு, வழக்கறிஞர் களின் சேம்பர்களும் திறக்கப் பட்டன. நேரடி விசாரணையின் போது வழக்கறிஞர்கள், அரசு அதி காரிகள் தவிர்த்து வேறு யாரும் உள்ளே செல்ல அனு மதிக்கப்படவில்லை.
நாளை முதல்..
இந்நிலையில், தமிழகத்தில் குறிப்பாக சென்னையில் கரோனா பரவல் மீண்டும் அதிகரித்துள்ள தால் உயர் நீதிமன்றத்தில் மார்ச் 8-ம் தேதி (நாளை) முதல் மீண்டும் காணொலி காட்சி மூலமாக விசாரணை நடைபெறும் என்று தலைமை பதிவாளர் சி.குமரப்பன் அறிவித்துள்ளார். சென்னை உயர் நீதிமன்றம் மற்றும் உயர் நீதிமன்ற மதுரை கிளையில் நாளை முதல் நடைபெறும் விசாரணையில் மத்திய, மாநில அரசுகள் தரப்பில் ஆஜராகும் வழக்கறிஞர்கள் மட்டும் நேரடி விசாரணைக்கு அனுமதிக் கப்படுவார்கள். மனுதாரர் தரப்பு வழக்கறிஞர்கள் காணொலி மூலமாகவே ஆஜராக வேண்டும் என்றும் அறிவிக்கப்பட்டுள்ளது.
திறக்கப்பட்டிருந்த வழக்கறிஞர் களின் சேம்பர்கள், வழக்கறிஞர்கள் சங்க அறைகள் ஆகியவையும் நாளை முதல் மீண்டும் காலவரை யின்றி மூடப்படுகின்றன. எனவே, வழக்கறிஞர்கள் தங்கள் உடமை களை இன்று காலை 11 மணி முதல் மாலை 3 மணிக்குள் எடுத் துக்கொள்ள அனுமதிக்கப்படு வார்கள் என்று அறிவிக்கப் பட்டுள்ளது.
நீதிமன்ற புறக்கணிப்பு
இதற்கிடையில், உயர் நீதிமன்றத்தின் இந்த அறிவிப்புக்கு எதிர்ப்பு தெரிவித்து சென்னை உயர் நீதிமன்ற வழக்கறிஞர்கள் சங்கத் தலைவர் ஜி.மோகனகிருஷ்ணன், அனைத்து வழக்கறிஞர்கள் சங்கத் துடன் கலந்து பேசி, நாளை நீதிமன்றப் புறக்கணிப்பில் ஈடுபட உள்ளதாக அறிவித்துள்ளார். வழக்கறிஞர்களின் சேம்பர்கள் மூடப்படுவதற்கு மற்ற வழக் கறிஞர்கள் சங்கத்தினரும் அதி ருப்தி தெரிவித்துள்ளனர்.
உச்ச நீதிமன்றத்தில் சோதனை அடிப்படையில் நேரடி விசாரணை
புதுடெல்லி: கரோனா பரவலைக் கட்டுப்படுத்த கடந்த ஆண்டு மார்ச் மாத இறுதியில் பொது முடக்கம் அறிவிக்கப்பட்டது. இதையடுத்து, உச்ச நீதிமன்ற வழக்குகள் மீது காணொலியில் விசாரணை நடைபெற்று வருகிறது. இதனிடையே, நாடு முழுவதும் கரோனா தடுப்பூசி போடும் பணி தொடங்கி உள்ளது. இதனால் கரோனா பரவல் குறையும் என எதிர்பார்க்கப்படுகிறது. இந்நிலையில், உச்ச நீதிமன்ற பதிவாளர் வெளியிட்ட அறிக்கையில் கூறியிருப்பதாவது:
வரும் 15-ம் தேதி முதல் செவ்வாய், புதன், வியாழக்கிழமைகளில் விசாரணைக்காக பட்டியலிடப்படும், இறுதிக்கட்ட விசாரணை அல்லது வழக்கமான விவகாரங்கள் தொடர்பான வழக்குகளை மட்டும் சோதனை அடிப்படையில் நேரடியாக விசாரிக்க முடிவு செய்யப்பட்டுள்ளது. அதேநேரம், விசாரணைக்கு நேரடியாக ஆஜராவதா அல்லது இணைய வழியில் ஆஜராவதா என்பது குறித்து வழக்கறிஞர்கள் முடிவு செய்யலாம்.
ஆனால், திங்கள், வெள்ளிக்கிழமைகளில் பட்டியலிடப்படும் மற்றும் இதர விவகாரங்கள் தொடர்பான வழக்குகள் மீதான விசாரணை தொடர்ந்து காணொலி காட்சி மூலமே நடைபெறும். இவ்வாறு அதில் கூறப்பட்டுள்ளது. பதவியில் உள்ள மற்றும் ஓய்வுபெற்ற நீதிபதிகள் மற்றும் அவர்களின் குடும்பத்தினர்கள் கரோனா தடுப்பூசி போட்டுக் கொள்ள உச்ச நீதிமன்றம் ஏற்பாடு செய்துள்ளது குறிப்பிடத்தக்கது.
No comments:
Post a Comment