
குரான் குறித்து சர்ச்சைக்குரிய கருத்துக்கள் தெரிவித்ததால் உ.பி. ஷியா மத்திய வக்பு வாரியத்தின் முன்னாள் தலைவர் வாசீம் ரிஸ்விக்கு கடும் எதிர்ப்பு கிளம்பியுள்ளது.
உத்தர பிரதேச ஷியா மத்திய வக்பு வாரியத்தின் முன்னாள் தலைவர் வாசீம் ரிஸ்வி. இவர் அண்மையில் குரானின் 26 வசனங்களை நீக்கக்கோரி உச்ச நீதிமன்றத்தில் மனு தாக்கல் செய்தார். அந்த வசனங்கள் வன்முறை இயல்பாக இருப்பதாகவும், உண்மையான குரானில் அந்த பகுதி கிடையாது. முகமது நபி இறந்த பின்னர் அந்த வசனங்கள் சேர்க்கப்பட்டுள்ளது என்று அந்த மனுவில் குறிப்பிட்டு இருந்தார்.
குரான் குறித்த வாசீம் ரிஸ்வியின் இந்த கருத்து சர்ச்சையை கிளப்பியதோடு, அவரது உயிருக்கும் ஆபத்தை ஏற்படுத்தியுள்ளது. ரிஸ்வியின் தலை துண்டித்தால் ரூ.11 லட்சம் பரிசு வழங்கப்படும் என்று ஒரு வழக்கறிஞர் அறிவித்தார். அமிருல் ஹசன் ஜைதிக்கு எதிராக இந்திய தண்டனை சட்டம் பிரிவு 505 (2), 506 ஆகியவற்றின்கீழ் எப்,ஐ.ஆர். பதிவு செய்யப்பட்டுள்ளது.

மார்ச் 19ம் தேதியன்று வெள்ளிக்கிழமையன்று தொழுகைக்கு பிறகு, வாசீம் ரிஸ்விக்கு எதிர்ப்பு தெரிவித்து பெரிய கூட்டம் மற்றும் பேரணிக்கு அழைப்பு விடுக்கப்பட்டுள்ளது. நேற்று ஷியா முஸ்லிம் இளைஞர்கள் ரிஸ்வியின் ஹயாதி கப்ரை (வாழும் கல்லறை) உடைத்தனர். குரானுக்கு எதிராக பேசியது முதல் ரிஸ்வி முஸ்லிம் இல்லை, ஷியா முஸ்லிம் மயானத்தில் அடக்கம் செய்ய தகுதியற்றவர் என்று அவர்கள் தெரிவித்தனர்.
No comments:
Post a Comment