
சென்னை : நீண்ட இழுபறிக்குப் பின், அ.ம.மு.க.,வுடன் கூட்டணி அமைத்துள்ள
தே.மு.தி.க.,விற்கு, 60 தொகுதிகள் ஒதுக்கப்பட்டுள்ளன. விஜயகாந்த்
போட்டியிடவில்லை; விருத்தாசலம் தொகுதியில் பிரேமலதா வேட்பாளராக
அறிவிக்கப்பட்டுள்ளார்.சட்டசபை தேர்தலில், அ.தி.மு.க.,வுடன் கூட்டணி
அமைக்க, தே.மு.தி.க., விரும்பியது. மிக குறைந்த தொகுதிகளை ஒதுக்க,
அ.தி.மு.க., முன் வந்ததால், கூட்டணியில் இருந்து விலகியது.இதைத் தொடர்ந்து,
அ.ம.மு.க.,வுடன் கூட்டணி அமைப்பதற்கான ரகசிய பேச்சில், தே.மு.தி.க., மாநில
நிர்வாகிகள் ஈடுபட்டனர். நேற்று, இருகட்சிகள் இடையே உடன்பாடு ஏற்பட்டு,
தே.மு.தி.க.,வுக்கு, 60 தொகுதிகள் ஒதுக்கப்பட்டன. சென்னை கோயம்பேடில் உள்ள
தே.மு.தி.க., தலைமை அலுவலகத்தில், அ.ம.மு.க., துணை பொதுச்செயலர்
செந்தமிழன், தே.மு.தி.க., அவைத்தலைவர் இளங்கோவன் ஆகியோர், இதற்கான
ஒப்பந்தத்தில் கையெழுத்திட்டனர்.
தே.மு.தி.க.,விற்கு ஒதுக்கப்பட்டுள்ள தொகுதிகளில்,
அ.ம.மு.க., வேட்பாளர்கள் விலக்கி கொள்ளப்படுவர் எனவும் அறிவிக்கப்பட்டு
உள்ளது.இதைத் தொடர்ந்து, 60 தொகுதிகளுக்கான வேட்பாளர் பட்டியலையும்,
தே.மு.தி.க., வெளியிட்டுள்ளது. உடல்நல பாதிப்பால், விஜயகாந்த்
போட்டியிடவில்லை; விருத்தாசலம் தொகுதியில், பிரேமலதா போட்டியிடுகிறார்.
No comments:
Post a Comment