
இந்திய உணவு தானியக் கழகத்தில் நிர்ணயிக்கப்பட்ட தேவையான அளவைக் காட்டிலும் இரண்டரை மடங்கு அதிகமாக தானிய இருப்பு உள்ளதாக மத்திய உணவு மற்றும் நுகர்வோர் விவகார அமைச்சர் பியூஷ் கோயல் கூறினார்.
மக்களவையில் கேள்வி நேரத்தின்போது உணவுக் கழகம் குறித்தும் தானியங்கள் கொள்முதல் குறித்தும் கேள்விகள் எழுப்பப்பட்டன. அதற்கு பதிலளித்த மத்திய அமைச்சர் பியூஷ் கோயல்கூறியதாவது, 'ஜனவரி 1ம் தேதி நிலவரப்படி இந்திய உணவு தானியக் கழகத்தில் அரிசி மற்றும் கோதுமையின் இருப்பு 52.3 மில்லியன் டன்னாக உள்ளது. ஆனால் நம்முடைய தேவை வரம்பு 21.4 மில்லியன் டன்னாக நிர்ணயிக்கப்பட்டிருக்கிறது. அதன்படி உணவு தானிய இருப்பு தேவையைவிட இரண்டரை மடங்கு அதிகமாக உள்ளது என அவர் தெரிவித்தார்.
மேலும் தேவைக்கு அதிகமாக இருக்கும் உணவு தானிய இருப்பு இந்திய உணவுக் கழகத்துக்குக் கவலை தரும் விஷயமாக இருப்பதாகவும் அவர் கூறினார். கரோனாவைரஸ் பரவலுக்காக ஊரடங்கு அமல்படுத்தப்பட்டபோது தேசிய உணவுப் பாதுகாப்பு சட்டத்தின் கீழ் குடும்ப அட்டை பயனாளர்கள் அனைவருக்கும் வழக்கமான அளவை விட 5கிலோ கூடுதலாக விநியோகம் செய்யப்பட்டது. மேலும் குடும்ப அட்டை இல்லாதபுலம்பெயர் தொழிலாளர்களுக் கும் 5 கிலோ உணவு தானியம் வழங்கப்பட்டது.
அவ்வாறு வழங்கப்படாமல் இருந்திருந்தால் உணவு தானிய இருப்பு மேலும் அதிகமாக இருந்திருக்கும். தற்போது கொள்முதல்செய்யப்படும் உணவு தானியங்களை வைக்க இடப்பற்றாக்குறை ஏற்பட்டிருக்கும் என்று அவர் கூறினார்.
No comments:
Post a Comment