
சட்டப்பேரவைத் தேர்தலில் 21 தொகுதிகளுக்கான காங்கிரஸ் வேட்பாளர்கள் அறிவிக்கப்பட்டுள்ளனர். வேளச்சேரி, மயிலாடுதுறை, குளச்சல், விளவங்கோடு ஆகிய 4 தொகுதிகளுக்கான வேட்பாளர்களை முடிவு செய்வதில் இழுபறி ஏற்பட்டுள்ளது.
சட்டப்பேரவைத் தேர்தலில் திமுக கூட்டணியில் 25 தொகுதிகளில் காங்கிரஸ் போட்டியிடுகிறது. காங்கிரஸ் வேட்பாளர் தேர்வில் வெளிப்படைத்தன்மை இல்லை என்றும், மாற்றுக் கட்சியிலிருந்து வந்தவர்களுக்கு வாய்ப்பு வழங்கக் கூடாது என்றும் கூறி காங்கிரஸ் எம்.பி. விஷ்ணுபிரசாத் சென்னை சத்தியமூர்த்தி பவனில் தனது ஆதரவாளர்களுடன் உண்ணாவிரதப் போராட்டத்தில் ஈடுபட்டார். அதற்கு எதிராக தமிழக காங்கிரஸ் தலைவர் கே.எஸ்.அழகிரி ஆதரவாளர்களும் போராட்டத்தில் ஈடுபட்டனர். காங்கிரஸ் வேட்பாளர் தேர்வில் ஊழல் நடப்பதாக காங்கிரஸ் எம்.பி.ஜோதிமணி குற்றம்சாட்டியிருந்தார்.
இந்த பரபரப்பான சூழலில் 21 தொகுதிகளுக்கான வேட்பாளர் பட்டியலை காங்கிரஸ் அகில இந்தியப் பொதுச்செயலாளர் முகுல் வாஸ்னிக் நேற்று முன்தினம் நள்ளிரவில் வெளியிட்டார். 21 தொகுதிகளில் போட்டியிடும் காங்கிரஸ் வேட்பாளர்கள்:
பொன்னேரி (தனி) - துரை சந்திரசேகரன், பெரும்புதூர் (தனி) - கு.செல்வப்பெருந்தகை, சோளிங்கர் - ஏ.எம்.முனிரத்தினம், ஊத்தங்கரை (தனி) - ஜே.எஸ்.ஆறுமுகம், கள்ளக்குறிச்சி (தனி) கே.ஐ. மணிரத்தினம், ஓமலூர் - ஆர்.மோகன் குமாரமங்கலம், ஈரோடு கிழக்கு - திருமகன் ஈ.வெ.ரா, உதகமண்டலம் - ஆர்.கணேஷ், கோவை தெற்கு - மயூரா எஸ். ஜெயக்குமார், உடுமலைப்பேட்டை - கே.தென்னரசு, விருத்தாசலம் - எம்.ஆர்.ஆர்.ராதாகிருஷ்ணன், அறந்தாங்கி - எஸ்.டி.ராமச்சந்திரன், காரைக்குடி - எஸ்.மங்குடி, மேலூர் - டி.ரவிச்சந்திரன், வில்லிபுத்தூர் (தனி) - பி.எஸ்.டபிள்யூ. மாதவராவ், சிவகாசி -ஏ.எம்.எஸ்.ஜி. அசோகன், திருவாடனை - ஆர்.கருமாணிக்கம், வைகுண்டம் - ஊர்வசி எஸ்.அமிர்தராஜ், தென்காசி - எஸ்.பழனி நாடார், நாங்குநேரி - ஆர்.ரூபி மனோகரன், கிள்ளியூர் - எஸ்.ராஜேஷ்குமார்.
தமிழக காங்கிரஸ் முன்னாள் தலைவர்கள் சு.திருநாவுக்கரசரின் மகன் எஸ்.டி.ராமச்சந்திரன் - அறங்தாங்கி, ஈ.வி.கே.எஸ்.இளங்கோவனின் மகன் - திருமகன் ஈ.வெ.ரா. - ஈரோடு கிழக்கு, முன்னாள் மத்திய அமைச்சர் ரங்கராஜன் குமாரமங்கலத்தின் மகன் மோகன் குமாரமங்கம் -ஓமலூர், சட்டப்பேரவை காங்கிரஸ் கட்சித் தலைவர் கே.ஆர்.ராமசாமியின் மகன் ஆர்.கருமாணிக்கம் - திருவாடனை, விருதுநகர் காங்கிரஸ் எம்.பி. மாணிக்கம் தாகூரின் மாமனார் டி.ரவிசந்திரன் - மேலூர் தொகுதியில் வாய்ப்பளிக்கப்பட்டுள்ளது.
தற்போது எம்.எல்.ஏ.க்களாக உள்ள ஆர்.கணேஷ் - உதகமண்டலம், ஆர்.ராஜேஷ்குமார் - கிள்ளியூர் ஆகியோருக்கு மீண்டும் வாய்ப்பளிக்கப்பட்டுள்ளது. வேளச்சேரி, மயிலாடுதுறை, குளச்சல், விளவங்கோடு ஆகிய தொகுதிகளுக்கு பலரும் மோதுவதால் வேட்பாளர்களை தேர்வு செய்வதில் இழுபறி ஏற்பட்டுள்ளதாக அக்கட்சியினர் தெரிவிக்கின்றனர்.
21 தொகுதிகளுக்கான வேட்பாளர் பட்டியலை காங்கிரஸ் அகில இந்தியப் பொதுச்செயலாளர் முகுல் வாஸ்னிக் நேற்று முன்தினம் நள்ளிரவில் வெளியிட்டார்.
No comments:
Post a Comment