
தமிழகத்தில் குறிப்பிட்ட சில மாவட்டங்களில் கொரோனா 2ஆவது அலை ஏற்பட வாய்ப்பு இருப்பதாக சுகாதாரத்துறை செயலாளர் ராதாகிருஷ்ணன் தெரிவித்துள்ளார்.
தமிழகத்தில் மீண்டும் கொரோனா பரவல் அதிகரிக்க தொடங்கியுள்ளதால் மக்கள் அதிர்ச்சி அடைந்துள்ளனர். வெளிமாநிலம் மற்றும் வெளிநாட்டில் இருந்து தமிழகம் வந்தவர்கள் உட்பட 567 பேருக்கு புதிதாக கொரோனா வைரஸ் தொற்று கண்டறியப்பட்டுள்ளது.
இந்நிலையில் செங்கல்பட்டு, திருவள்ளூர், கோவை, திருப்பூர், காஞ்சிபுரம் மாவட்டங்களில் இரண்டாவது அலை வீசும் அபாயம் உள்ளதாக எச்சரிக்கை விடுக்கப்பட்டுள்ளது. அதனால் பொதுமக்கள் விழிப்புடன் இருக்க வேண்டும் என்றும், எப்போது கொரோனா தடுப்பு நடவடிக்கைகளை பின்பற்ற வேண்டும் எனவும் அறிவுறுத்தப்பட்டுள்ளனர்.

பொது இடங்களில் மாஸ்க் அணிய விட்டால் உடனே அபராதம் வசூலிக்க மாநகராட்சிக்கு உத்தரவிடப்பட்டுள்ளதாக சுகாதாரத்துறை செயலாளர் ராதாகிருஷ்ணன் தெரிவித்துள்ளார்.
கேரளா, மகாராஷ்டிரா மாநிலங்களில் கொரோனா மீண்டும் வேகமாக பரவும் நிலையில் வெளிமாநிலங்களில் இருந்து தமிழகம் வருவோருக்கு இ-பாஸ் கட்டாயமாக்கப்பட்டுள்ளது. புதுச்சேரி, கர்நாடகா, ஆந்திரா தவிர பிறமாநிலங்களில் இருந்து வருவோர்களுக்கு இ-பாஸ் கட்டாயமாக்கப்பட்டுள்ளது.
தமிழகத்தை பொறுத்தவரை கொரோனவால் பாதிக்கப்பட்டோரின் எண்ணிக்கை 8 லட்சத்து 55 ஆயிரத்து 121ஆக அதிகரித்துள்ளது. சிகிச்சை பெற்றுவருவோரின் எண்ணிக்கை 3,997 ஆக உள்ளது. கடந்த பல நாட்களாக கொரோனா பாதிப்பு 200 ஆக இருந்து வந்த நிலையில் தற்போது 500ஐ தாண்டியுள்ளது.
newstm.in
No comments:
Post a Comment