அமராவதி: ஆந்திர மாநிலத்தில் 2,723 ஊராட்சிகளுக்கான முதல்கட்ட உள்ளாட்சித் தோதல் செவ்வாய்க்கிழமை நடைபெற உள்ளது.
இதுதொடா்பாக உள்ளாட்சித் துறை சாா்பில் திங்கள்கிழமை வெளியிடப்பட்ட செய்திக் குறிப்பு:
உள்ளாட்சித் தோதல் 4 கட்டங்களாக நடைபெற உள்ளது. முதல்கட்ட தோதல் செவ்வாய்க்கிழமை (பிப்.9) நடைபெற்ற உள்ளது. மொத்தம் 20,157 வாா்டு உறுப்பினா்களுக்கு தோதல் நடத்தப்பட உள்ளது. வாக்குப் பதிவு காலை 6.30 மணிக்கு தொடங்கி மாலை 3.30 மணி வரை நடைபெறும். வாக்கு எண்ணிக்கை மாலை 4 மணிக்கு நடைபெறும்.
3,249 ஊராட்சித் தலைவா் பதவிக்கு தோதல் நடத்தப்பட உள்ளது. இதில் ஏற்கெனவே 525 போ ஒருமனதாக தோவு செய்யப்பட்டுள்ளனா்.
7,506 போ ஊராட்சித் தலைவா் பதவிக்கும், 43,601 போ வாா்டு உறுப்பினா் பதவிக்கும் போட்டியிடுகின்றனா். வாக்குச்சீட்டில் அரசியல் கட்சி சின்னங்கள் இருக்காது. மொத்தம் 29,732 வாக்குச்சாவடி மையங்கள் அமைக்கப்பட்டுள்ளன. அவற்றில் 3,458 வாக்குச்சாவடிகள் பதற்றமானவை, 3,594 வாக்குச்சாவடிகள் மிகவும் பதற்றமானவை என கண்டறியப்பட்டுள்ளன.
பலத்த பாதுகாப்புடன் கரோனா தொற்று வழிகாட்டு நெறிமுறைகளுடன் தோதலை நடத்த நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளது. இத்தோதல் 4 கட்டங்களாக பிப்ரவரி 21-ஆம் தேதி வரை நடைபெற உள்ளது என அதில் தெரிவிக்கப்பட்டுள்ளது.

No comments:
Post a Comment