
20 ரூபாய் மதிப்புள்ள பான்பராக் கொடுக்க மறுத்த கடைகாரர் ஒருவர் சுட்டுக் கொல்லப்பட்ட சம்பவம் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.
20 ரூபாய்க்காக ஒருவர் கொலை செய்யப்படுவார் என்று கற்பனை செய்து பார்த்திருப்போமா? ஆனால் நடந்துள்ளது. பீகார் மாநிலம் சுபால் மாவட்டம் திரிவேனிகஞ்ச் பகுதியில் உள்ள ஒரு கடையில், அஜித்குமார் என்ற இளைஞர் பான்பராக் ஒன்றை கடனாக கேட்டுள்ளார்.
மிதிலேஷ் என்பவர் கடை நடத்திவருகிறார். அஜித்குமார் இப்படி கடன்கேட்டு அடிக்கடி தகராறு செய்து வருபவர் என தெரிகிறது. முதல் நாள் மிதிலேஷின் தந்தையிடம் கடனுக்கு பான்பராக் கேட்டு அவர் சட்டை போட்டுள்ளார்.

மறுநாள் மிதிலேஷிடம் கடனுக்கு பான்பராக் கேட்டுள்ளார். ஆனால் கடைகாரர் தர மறுத்துவிட்டார். இதனால் இருவருக்கும் வாக்குவாதம் ஏற்பட்ட நிலையில் அஜித்குமார் மிதிலேஷை சுட்டுக் கொன்றுவிட்டு அங்கிருந்து தப்பிச்சென்றார்.
தகவல் அறிந்து சம்பவ இடத்திற்கு வந்த போலீஸார் இறந்தவரின் உடலை மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர். தொடர்ந்து தப்பிச்சென்ற அஜித்குமாரை தீவிரமாக தேடி வருகின்றனர்.
newstm.in
No comments:
Post a Comment