
சென்னை மெட்ரோவில் இன்று மதியம் 2 மணி முதல் இரவு 11 மணி வரை கட்டணமின்றி பயணம் செய்யலாம் என மெட்ரோ நிர்வாகம் தெரிவித்துள்ளது.
இன்று சென்னை வரும் பிரதமர் மோடி பல்வேறு நிகழ்ச்சிகளில் கலந்து கொள்கிறார். அப்போது மெட்ரோ ரயில் வழித்தடத்தை தொடங்கி வைக்கிறார். அதனைத் தொடர்ந்து மதியம் 1.30 மணிக்கு புறப்பட்டு கேரளா செல்கிறார்.
இந்நிலையில் பிரதமர் மெட்ரோ ரயில் திட்டத்தை தொடங்கி வைப்பதால் மக்கள் கட்டணமின்றி இலவசமாக பயணிக்கலாம் என மெட்ரோ நிர்வாகம் தெரிவித்துள்ளது.

அதாவது பிரதமர் புறப்பட்ட பிறகு மதியம் 2 மணிமுதல் இரவு 11 மணி வரை பொதுமக்கள் கட்டணம் செலுத்தாமல் பயணிக்க முடியும். இதனை சென்னை மக்கள் பயன்படுத்திக் கொள்ளுமாறு மெட்ரோ ரயில் நிர்வாகம் கேட்டுக் கொண்டுள்ளது.
newstm.in
No comments:
Post a Comment