
தமிழகத்தில் சின்ன வெங்காயத்தின் விலை 1 கிலோ சின்ன வெங்காயம் ரூ.160-க்கு விற்பனை செய்யப்படுகிறது. இதனால், இல்லத்தரசிகள் பெரும் அதிர்ச்சி அடைந்தள்ளனர்.
நாட்டின் மொத்த சின்ன வெங்காயம் உற்பத்தியில் தமிழகம் முதன்மை மாநிலமாக திகழ்கிறது. திருப்பூர், திண்டுக்கல், நாமக்கல், திருச்சி, மதுரை, பெரம்பலூர், தேனி ஆகிய மாவட்டங்களில் சின்ன வெங்காயம் பாரம்பரியமாகச் சாகுபடி செய்யப்படுகிறது. தை, வைகாசி மற்றும் புரட்டாசி மாதங்களில் மட்டுமே சின்ன வெங்காயம் பயிரிடப்பட்டு, அறுவடை செய்யப்படுகிறது.
ஆனால், தமிழகத்தின் பல பகுதிகளில் சின்ன வெங்காய பயிர்கள் மழையால் அழுகியதால் சந்தைகளில் வரத்து மிக குறைவாக உள்ளது. வெளிமாநிலங்களில் இருந்தும் சின்ன வெங்காயத்தின் வரத்து குறைவாக உள்ளது. இதனால் கடந்த சில நாட்களாக சின்ன வெங்காயத்தின் விலை பன் மடங்கு அளவு உயர்ந்துள்ளது.

தமிழகத்திலேயே அதிகபட்சமாக திண்டுக்கல்லில் இன்று 1 கிலோ சின்ன வெங்காயம் ரூ160 -க்கு விற்பனை செய்யப்பட்டது. இதேபோல, பெரிய வெங்காயத்தின் விலையும் உயர்ந்து வருகிறது. சமையலுக்கு மிக முக்கியமான வெங்காயத்தின் கிடுகிடு விலை உயர்வு பொதுமக்களை பெரும் அதிர்ச்சி அடைய வைத்துள்ளது.
இந்த விவகாரத்தில் முதல்வர் எடப்பாடி பழனிசாமி தலையிட்டு, விலை உயர்வை கட்டுப்படுத்தவேண்டும் என இல்லத்தரசிகள் கோரிக்கை விடுத்துள்ளனர்.
No comments:
Post a Comment