
நாடாளுமன்ற மக்களவையில் ராகுல் காந்தியை அவநம்பிக்கை கொண்ட மனிதராக மாறி வருகிறார் என்று நிர்மலா சீதாராமன் கூறியதற்கு எதிர்ப்பு தெரிவித்து அவருக்கு எதிராக காங்கிரஸ் எம்.பி. உரிமை மீறல் தீர்மானம் கொண்டு நோட்டீஸ் கொடுத்தார்.
காங்கிரஸ் எம்.பி. டி.என்.பிரதாபன், மத்திய நிதியமைச்சர் நிர்மலா சீதாராமனுக்கு எதிராக உரிமை மீறல் தீர்மானம் கொண்டு வரக்கோரி கொடுத்த நோட்டீஸில் கூறியிருப்பதாவது: ராகுல் காந்தியை இந்தியாவின் டூம்ஸ்டே மேன் (அவநம்பிக்கை அல்லது கெட்ட எண்ணம் கொண்ட மனிதன்) என்று நிர்மலா சீதாராமன் துஷ்பிரயோகம் செய்தார். சபையில் தேர்ந்தெடுக்கப்பட்ட உறுப்பினரான ராகுல் காந்தியை விளிம்பு உறுப்பு குழுக்களுடன் இணைந்துள்ளார்.
மேலும் நாட்டை இழிவுப்படுத்துகிறார் என்றும் சீதாராமன் குற்றம் சாட்டியுள்ளார். இது முற்றிலும் உரிமை மீறல். ஒரு அழிவு சக்தி எந்த அடிப்படையில் ராகுல் காந்தியை குற்றம் சாட்டினார். இது போன்ற சொற்களை பயன்படுத்துவது நாடாளுமன்றத்தின் பெருமை மற்றும் உரிமைக்கு எதிரான தாக்குதல். கருத்து வேறுபாடுகள் மற்றும் விமர்சனங்களை விளிம்பு அல்லது அழிவுகரமான அல்லது தேசவிரோதம் என்று முத்திரை குத்தும் போக்கை நாங்கள் அனுமதிக்க முடியாது. இவ்வாறு அவர் தெரிவித்தார்.

நாடாளுமன்ற மக்களவையில் நேற்று 2021-22ம் நிதியாண்டின் மத்திய பட்ஜெட் மீதான விவாதத்துக்கு மத்திய நிதியமைச்சர் நிர்மலா சீதாராமன் பதில் அளித்தார். அப்போது அவர் உரையாற்றுகையில், கோவிட்-19 தொற்றுநோய் பற்றி அவர் (ராகுல் காந்தி) கூறியது எனக்கு நினைவிருக்கிறது. சபையின் நேரத்தை வீணடிக்க நான் விரும்பவில்லை ஆனால் சுருக்கமாக சொல்கிறேன். ராகுல் காந்தியின் பேச்சு தொடர்ந்து இந்தியாவை இழிவுப்படுத்துவேன் என்பது போல இருந்தது. காங்கிரசின் மூத்த தலைவர் (ராகுல் காந்தி) இந்தியாவின் டூம்ஸ்டே (அவநம்பிக்கை) மனிதராக மாறி வருகிறார் என்று தெரிவித்தார்.
No comments:
Post a Comment