
'இந்து தமிழ் திசை' வெளியீடாக டாக்டர் வி.டில்லிபாபு எழுதிய 'போர்முனை முதல் தெருமுனை வரை' நூல் வெளியீட்டு விழாஆன்லைனில் நாளை (பிப்.26)மாலை 6 மணிக்கு நடைபெற வுள்ளது.
தேசிய வடிவமைப்பு மற்றும்ஆராய்ச்சி மன்றத்தின் (என்டிஆர்எஃப்) இயக்குநர் டாக்டர் வி.டில்லிபாபு, போர் விமானம் மற்றும் அறிவியல் தொழில்நுட்பம் குறித்த பல நூல்களை எழுதியுள்ளார். 'காமதேனு' வார இதழில்'போர்முனை முதல் தெருமுனை வரை' எனும் தலைப்பில் பிரம்மோஸ் உள்ளிட்ட ஏவுகணைகள், பேரிடர் காலங்களில் மீட்புப் பணிகளில் ஈடுபடும் ஹெலிகாப்டர் ஆகியவை பற்றியும், டிஆர்டிஓ நிறுவனத்தின் அறிவியல் ஆராய்ச்சிகளால் விளைந்த பயனையும் எளிய மொழியில் விளக்கும் வகையில் அவர் எழுதிய தொடர், தற்போது நூலாக நாளை வெளியிடப்பட உள்ளது.
இந்த நூல் வெளியீட்டு விழாவில் தலைமை விருந்தினராக விண்வெளி விஞ்ஞானி பத்ம மயில்சாமி அண்ணாதுரை பங்கேற்று நூலை வெளியிடுகிறார்.
சென்னை, ஆவடியிலுள்ள போர்வாகன ஆராய்ச்சி மற்றும் மேம்பாட்டு நிறுவனத்தின் இயக்குநர் வி.பாலமுருகன், அப்துல்கலாமின் முன்னாள் அறிவியல் ஆலோசகர் வெ.பொன்ராஜ், எழுத்தாளரும் ஐபிஎஸ் அதிகாரியுமான டாக்டர் பி.சாமூண்டேஸ்வரி ஆகியோர் பங்கேற்று கருத்துரையாற்ற உள்ளனர்.
இந்த ஆன்லைன் நூல் வெளியீட்டு விழாவில் இணைய விரும்புபவர்கள் http://bit.ly/3s9z3GO எனும் முகநூல் லிங்க்கில் அல்லது http://bit.ly/3qHDhdh எனும் யு-டியூப் லிங்க்கில் இணைந்து கொள்ளலாம்.
No comments:
Post a Comment