
புது தில்லி: பெட்ரோல், டீசல் விலை செவ்வாய்க்கிழமை புதிய உச்சத்தை எட்டியநிலையில், புதன்கிழமை அவற்றின் விலை மேலும் உயர்ந்தது.
சென்னையில் ஒரு லிட்டர் பெட்ரோல் ரூ.89.96 ஆகவும், ஒரு லிட்டர் டீசல் ரூ.82.90 ஆகவும் உள்ளது. இரு எரிபொருள்களின் விலையும் இரண்டாவது நாளாக சுமார் 30 பைசா அளவுக்கு அதிகரித்துள்ளது.
மும்பையில் முன்னெப்போதும் இல்லாத வகையில் பெட்ரோல் ஒரு லிட்டர் ரூ.94.12 ஆகவும், தில்லியில் ரூ.87.60 ஆகவும் விற்பனையாகிறது. பெட்ரோல் மீது மத்திய, மாநில அரசுகள் விதிக்கும் வரி மட்டும் 61 சதவீதத்துக்குமேல் உள்ளது. இதுவே, டீசல் மீது மத்திய, மாநில அரசுகளின் வரி 56 சதவீதமாக உள்ளது.
மத்திய அரசு வரியைக் குறைத்து பெட்ரோல், டீசல் விலையைக் கட்டுக்குள் கொண்டு வர வேண்டும் என்று நீண்டகாலமாக கோரிக்கை விடுக்கப்பட்டு வருகிறது. எனினும், இது தொடர்பாக மாநிலங்களவையில் பேசிய பெட்ரோலியத் துறை அமைச்சர் தர்மேந்திர பிரதான், "பெட்ரோல், டீசல் மீது மத்திய அரசு விதிக்கும் கலால் வரியைக் குறைப்பதன் மூலம், அவற்றின் விலையைக் குறைக்கும் திட்டமில்லை' என்றார்.
No comments:
Post a Comment