
புதுடில்லி :சமூக வலைதளங்களில் பொய்யான தகவல்களை பரப்பி, வெறுப்புணர்வை
துாண்டுவதை, தடுப்பதற்கான வழிமுறைகளை உருவாக்க கோரிய மனு மீது, மத்திய
அரசு மற்றும் 'டுவிட்டர்' இந்தியா நிறுவனம் பதில் அளிக்க, உச்ச நீதிமன்றம்
உத்தரவிட்டுள்ளது. 'பேஸ்புக்'வினித் கோயங்கா என்பவர், உச்ச நீதிமன்றத்தில்
தாக்கல் செய்த மனுவில் கூறப்பட்டுஉள்ளதாவது:நம் நாட்டில், 3.50 கோடி,
'டுவிட்டர்' கணக்குகளும், 35 கோடி, 'பேஸ்புக்' சமூக வலைதள கணக்குகளும்
உள்ளன. இதில், 10 சதவீத கணக்குகள், போலியான நபர்களால் துவக்கப்பட்டு உள்ளது
என, நிபுணர்கள் தெரிவிக்கின்றனர். சமூகத்தில் உயர் பதவியில் உள்ள
அதிகாரிகள் மற்றும் பல்வேறு துறை பிரபலங்களின் பெயரில், நுாற்றுக்கணக்கான
போலி சமூக வலைதள கணக்குகள் உலவுகின்றன.அவர்களின் புகைப்படங்களுடன்
இயங்கிவரும் இந்த கணக்குகள் வாயிலாக பகிரப்படும் பொய்யான தகவல்களை, உண்மை
என, மக்கள் கருதுகின்றனர்.சமீபத்தில், குடியரசு தின விழா அன்று நடந்த
கலவரத்தில் இருந்து, நாட்டின் பல்வேறு கலவரங்களுக்கும், பொய்யான
பிரசாரங்கள் காரணமாக இருந்துள்ளன.போலி சமூக வலைதள கணக்குகள் வாயிலாக, ஜாதி,
மத பிரிவினையை ஏற்படுத்தி, நாட்டின் அமைதி மற்றும் ஒற்றுமையை குலைக்க,
முயற்சிகள் நடக்கின்றன.எனவே, பொய்யான தகவல்கள் வாயிலாக வெறுப்புணர்வை
துண்டுவது, போலி கணக்குகளை துவங்கி, நாட்டில் கலகத்தை ஏற்படுத்தும்
உள்ளடக்கங்கள் மற்றும் விளம்பரங்களை ஒழுங்குபடுத்துவதற்கு வழிமுறைகள் இயற்ற
உத்தரவிட வேண்டும்.இவ்வாறு, மனுவில் கூறப்பட்டுள்ளது.இந்த மனு, தலைமை
நீதிபதி எஸ்.ஏ.பாப்டே தலைமையிலான அமர்வு முன், நேற்று விசாரணைக்கு
வந்தது.அப்போது, மனு தொடர்பாக பதில் அளிக்கும்படி, மத்திய அரசுக்கும்,
'டுவிட்டர்' இந்தியா நிறுவனத்துக்கும், நீதிமன்றம் உத்தரவிட்டது.500
கணக்குகள் முடக்கம்சர்ச்சையை துாண்டும் வகையிலான கருத்துக்களை
பதிவிடுவோரின் கணக்குகளை முடக்கும்படி, மத்திய அரசு, ஏற்கனவே டுவிட்டர்
நிறுவனத்துக்கு அறிவுறுத்தியிருந்தது.இதன்படி, 500 கணக்குகள்
முடக்கப்பட்டுள்ளதாகவும், சர்ச்சைக்குரிய பல்வேறு பதிவுகள்
நீக்கப்பட்டுள்ளதாகவும், டுவிட்டர் நிறுவனம் தெரிவித்துள்ளது.ஆனாலும்,
பத்திரிகையாளர்கள், பத்திரிகை நிறுவனங்கள், ஆர்வலர்கள் உள்ளிட்டோரின்
பதிவுகளை நீக்கவில்லை என்றும், அந்த நிறுவனம் தெரிவித்துள்ளது.
No comments:
Post a Comment